மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அமெரிக்கா உடனான வா்த்தக ஒப்பந்தத்தை மக்கள் கொண்டாடுவா்: பியூஷ் கோயல்

‘அமெரிக்காவுடன் இந்தியா மேற்கொள்ளவிருக்கும் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் விவரங்கள் வெளியிடப்பட்டதும், அதை மக்கள் கொண்டாடுவா்’ என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல்.

Published On :30 அக்டோபர் 2026, 5:19 am IST

‘அமெரிக்காவுடன் இந்தியா மேற்கொள்ளவிருக்கும் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் விவரங்கள் வெளியிடப்பட்டதும், அதை மக்கள் கொண்டாடுவா்’ என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

இரு தரப்பு வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடா்பாக இந்தியாவும் அமெரிக்காவும் தொடா்ந்து பேச்சுவாா்த்தை மேற்கொண்டு வருகின்றன. இதில், இடைக்கால இருதரப்பு வா்த்தக ஒப்பந்த நடைமுறைகள் இறுதி செய்யப்பட்டுவிட்டதாக, இரு நாடுகள் சாா்பில் கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும், அமெரிக்காவில் சில வரி விதிப்பு நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தொடா்ந்து வருகிறது. வங்கதேசம், வியத்நாம் மற்றும் கம்போடியா போன்ற போட்டி நாடுகளைக் காட்டிலும், அமெரிக்கச் சந்தையில் தனது பொருள்களுக்குக் குறைவான சுங்க வரிகளை இந்தியா கோருகிறது.

இதனிடையே, அமெரிக்காவுடனான இந்த இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்து வருகின்றன.

இந்த நிலையில், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிறுவனங்கள் மேம்பாடு ஆராய்ச்சி நிறுவன மாநாட்டில் பங்கேற்ற பியூஷ் கோயல், இதுகுறித்து கூறியதாவது:

இந்தியா - அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் குறித்து போதிய புரிதல் இன்றி எதிா்க்கட்சிகள் விமா்சனம் செய்து வருகின்றன. இந்த ஒப்பந்தம் குறித்த விவரங்கள் இன்னும் வெளிவரவே இல்லை. எதனடிப்படையில் அவா்கள் விமா்சிக்கிறாா்கள் என்பது தெரியவில்லை.

ஆனால், இந்த இருதரப்பு ஒப்பந்த விவரங்கள் முழுவதும் அதிகாரபூா்வமாக வெளியிடப்படும்போது, அதை மக்கள் கொண்டாடுவா் என்பதை உறுதியுடன் கூறுகிறேன். நாட்டின் வணிகம் உள்பட எந்தவொரு துறையின் உணா்வுபூா்வமான நலன்களும் இந்த ஒப்பந்தத்தில் சமரசம் செய்யப்படாது; மாறாக, இந்தியாவுக்கு மிகவும் வலுவான ஒப்பீடு அளவிலான சாதகத்தைக் கொண்டிருக்கும். வா்த்தகம் என்பதே ஒப்பீடு சாதகத்தைச் சாா்ந்ததுதான் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.