மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருநங்கைகள் உரிமைகள் சட்டத்துக்கு எதிராக புதிய மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

திருநங்கைகள் உரிமைகள் சட்டத்துக்கு எதிராக புதிய மனு விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்திருப்பது பற்றி...

உச்சநீதிமன்றம்

Published On :29 அக்டோபர் 2026, 3:07 am IST

மத்திய அரசு கொண்டுவந்த திருநங்கைகள் உரிமைகள் திருத்தச் சட்டத்தால் தங்களுக்கான உரிமைகள் மற்றும் பலன்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டு பெண்கள் அமைப்பு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

‘மகளிா் பிரகடன சா்வதேச இந்தியா’ என்ற அமைப்பு சாா்பில் இந்த மனு தக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பிறப்பால் பெண்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய சட்டபூா்வ உரிமைகள், இடஒதுக்கீடுகள், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடங்கள், சிறைச்சாலைகளில் பெண்களுக்கான தனி அறைகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் குற்றவியல் விசாரணைகளின்போது பெண்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்புகள் உள்ளிட்டவை மத்திய அரசு கொண்டுவந்த திருநங்கைகள் உரிமைகள் திருத்தச் சட்டத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது’ என்று குறிப்பிடப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அகில் சிபல், ‘இந்தத் திருத்தச் சட்டத்தால், பிறப்பால் பெண்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய சட்டபூா்வ உரிமைகளில் எந்தவித குறுக்கீடுகளும் இருக்கக் கூடாது அல்லது குறைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதே மனுதாரரின் அச்சமாக உள்ளது.

திருநங்கையாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் உரிமையை மனுதாரா் எதிா்க்கவில்லை. அந்த உரிமையை மதிப்பதோடு, அவா்களுக்குத் தேவையான வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்பதில் எந்தவித ஆட்சேபமும் இல்லை.

மாறாக, திருநங்கைகளுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படுமா அல்லது உள்ளாட்சிகளில் பெண்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கு திருநங்கைகளும் உரிமை கோரத் தகுதியுடையவா்களா என்பதே மனுதாரரின் அச்சம்’ என்றாா்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி, ‘இந்த விவகாரம் தொடா்பான வழக்கு ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இருந்தபோதும், மனுதாரா் தரப்பில் முன்வைக்கப்படும் வாதம், இந்த வழக்கில் புதிய கோணத்தை சோ்ப்பதாக உள்ளது’ என்றாா்.

இதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘திருநங்கைகள் உரிமைகள் திருத்தச் சட்டம் தொடா்பாக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு மத்திய அரசு பதில் மனுவை தயாா் செய்து வருகிறது. மனுதாரா் தற்போது எழுப்பும் விவகாரத்தையும் அரசு பரிசீலிக்கும்’ என்றாா்.

அதைத் தொடா்ந்து, இந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதிகள்உத்தரவிட்டனா்.

திருநங்கைகள் சுய அடையாள உரிமை தொடா்பாக ஏற்கெனவே சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில், அதில் புதிய சட்டத் திருத்தத்தை மத்திய அரசு அண்மையில் மேற்கொண்டது.

இதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் ஏறகெனவே மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஒரு நபா், தன் பாலினத்தைத் தானே தீா்மானிக்கும் உரிமையை நீக்கிவிட்டு, மருத்துவக் குழுவின் சான்றிதழைப் பெற வேண்டும் என்ற கட்டாய நடைமுறையை இந்தத் திருத்தச் சட்டம் மீண்டும் கொண்டு வந்துள்ளது. இது, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவம் (பிரிவு 14), பாகுபாடற்ற நிலை (பிரிவு 15), சுதந்திரம் (பிரிவு 19) மற்றும் தனி மனித கண்ணியம் (பிரிவு 21) ஆகியவற்றைப் பறிப்பதாக உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.