மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஒர்னாப் புயல்: மத்திய குழுவை அனுப்பக் கோரி அமித் ஷாவுக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்

ஒர்னாப் புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட மத்திய குழுவை அனுப்பக் கோரி, அமித் ஷாவுக்கு சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளது குறித்து...

Chandrababu Naidu's letter to Amit Shah.

அமித் ஷாவுக்கு சந்திரபாபு நாயுடு கடிதம். - கோப்புப்படம்

Published On :28 அக்டோபர் 2026, 5:13 pm IST

ஒர்னாப் புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட மத்திய குழுவை அனுப்பக் கோரி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புதன்கிழமை (அக். 28) கடிதம் எழுதியுள்ளார்.

வங்கக் கடலில் உருவான ‘ஒர்னாப்’ புயல், ஆந்திரத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கரையைக் கடக்கத் தொடங்கி புதன்கிழமை (அக். 28) அதிகாலையில் கரையைக் கடந்துள்ளது.

இந்தப் புயலால் ஆந்திரம், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் பிற மத்திய அமைப்புகளின் ஆதரவைத் தொடரவும் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட, மத்திய குழுவை நியமிக்கவும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை ஆந்திர முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

முதற்கட்ட மதிப்பீட்டின்படி, ஆந்திரத்தில் சுமார் 70,900 ஹெக்டேர் நெற்பயிர்களும் 10,450 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்களும் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

இந்த நிலையில், மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தை மீட்டெடுப்பது, சாலைகளைச் சீரமைப்பது போன்ற மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu wrote a letter to Union Home Minister Amit Shah on Wednesday (Oct. 28), requesting that a team be sent by the Central government to assess the damage caused by Cyclone Ornap.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.