மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கீமோதெரபி ஊசி ரூ. 7000; புற்றுநோய் மருந்துகளின் புதிய விலைப் பட்டியல்!

543 புற்றுநோய் மருந்துகளின் திருத்தப்பட்ட புதிய விலைப் பட்டியல்...

tablets

கோப்புப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 10:29 pm IST

543 புற்றுநோய் மருந்துகளின் திருத்தப்பட்ட புதிய விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் இன்று (அக். 28) வெளியிட்டுள்ளது.

நாட்டில் புற்றுநோய் மருந்துகளின் விலையை 30% லாப வரம்புக்குள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து 543 மருந்துகளின் விலையை 70% வரை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. நவ. 9 ஆம் தேதி இந்த விலைக் குறைப்பு அமலுக்கு வரவுள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 543 புற்றுநோய் மருந்துகளின் திருத்தப்பட்ட புதிய விலைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,

மார்பக புற்றுநோய்க்கான பால்போசிக்லிப் (Palbociclib) - பழைய விலை ரூ. 40,421; புதிய விலை ரூ. 2,720.

இரத்தப் புற்றுநோய்க்கான டசாடினிப் (Dasatinib) - பழைய விலை ரூ. 17,811; புதிய விலை ரூ. ரூ.1,808.

தியோடெபா (Thiotepa) என்ற கீமோதெரபி ஊசி - பழைய விலை ரூ. 80,072; புதிய விலை ரூ. 7,150

பெர்டுசுமாப் (Pertuzumab) என்ற புற்றுநோய் ஊசி - பழைய விலை ரூ. 94,951; புதிய விலை ரூ. 30,593

அனஸ்ட்ரோசோல் (Anastrozole) - பழைய விலை ரூ. 695; புதிய விலை ரூ. 73

அசாசிடிடின் (Azacitidine) - பழைய விலை ரூ. 6,337; புதிய விலை ரூ. 1,495.04

பெவாசிரிசுமாப் (Bevacizumab) - பழைய விலை ரூ. 21,767.70; புதிய விலை ரூ. 5,930.13

டசாடினிப் (Dasatinib) - பழைய விலை ரூ. 2,812.50; புதிய விலை ரூ. 1,085.93

டெனோசுமாப் (Denosumab) - பழைய விலை ரூ. 22,031.25; புதிய விலை ரூ. 5,941

என்சாலுடாமைட் (Enzalutamide) - பழைய விலை ரூ. 6,578.20; புதிய விலை ரூ. 2,232

எர்லோட்டினிப் (Erlotinib) - பழைய விலை ரூ. 4,637.45; புதிய விலை ரூ. 2,008

ஃபுளுடராபின் (Fludarabine) - பழைய விலை ரூ. 14,235; புதிய விலை ரூ. 2,432

ஃபுல்வெஸ்ட்ரான்ட் (Fulvestrant) - பழைய விலை ரூ. 26,072.16; புதிய விலை ரூ. 5,491

புதிய விலைக் குறைப்பு நவம்பர் 9 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளின் (Keytruda, Imjudo, Opdivo) விலையில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

543 புற்றுநோய் மருந்துகளின் திருத்தப்பட்ட விலைப் பட்டியல்: இங்கே கிளிக் செய்யவும்

PDF
cancer medicine - revised-mrp-reported-28102026-28-10-2026
பார்க்க

Summary

Chemotherapy injection for Rs. 7,000 new price list for cancer drugs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.