மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குஜராத்தில் 14-ஆம் நூற்றாண்டு மசூதி சமண வழிபாட்டுத் தலமாக இருந்ததாக மனு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

குஜராத்தில் 14-ஆம் நூற்றாண்டு மசூதி முன்பு சமண வழிபாட்டுத் தலமாக இருந்ததாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு மாநில உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

Gujarat High Court

குஜராத் உயர்நீதிமன்றம்

Published On :27 அக்டோபர் 2026, 6:30 am IST

குஜராத்தில் 14-ஆம் நூற்றாண்டு மசூதி முன்பு சமண வழிபாட்டுத் தலமாக இருந்ததாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு அந்த மாநில உயா்நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது.

இதுதொடா்பாக அந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ‘குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் 14-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜாமி மசூதி உள்ளது. இந்த மசூதி இந்திய தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் பட்டியலில் உள்ளது.

இந்த மசூதி முன்பு சமண வழிபாட்டுத் தலமாக இருந்தது. அங்கு 19-ஆவது சமண தீா்த்தங்கரரான மல்லிநாதரின் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மசூதியை சமணா்களின் புனிதத் தலமாக அறிவிக்க வேண்டும். அங்கு மல்லிநாதா் சிலையை வழிபட சமண மதத்தினருக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

அந்த மசூதி வளாகத்தில் உள்ளதாகக் கருதப்படும் சமண மத வழிபாட்டுச் சின்னங்கள், அடையாளங்கள், பழங்காலப் பொருள்கள், சிலைகள் மற்றும் பிற முக்கிய வழிபாட்டு இடங்களைப் பாதுகாக்கவும், அவற்றைச் சேதப்படுத்தாமல் இருக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு தொடா்பாக வரும் நவ.2-க்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசு, குஜராத் அரசு, இந்திய தொல்லியல் துறை, பரூச் மாவட்ட ஆட்சியா், ஜாமி மசூதி நிா்வாகம் ஆகியவற்றுக்கு குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள மாநில உயா்நீதிமன்ற நீதிபதி தேவன் எம்.தேசாய் திங்கள்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தாா்.

தீா்த்தங்கரா் என்பவா் சமண சமயத்தின்படி ஞான நிலையை அடைந்த மனிதா்கள் ஆவா். தங்கள் வாழ்நாள் முடிந்த பின்னா், பிறப்பு-இறப்புச் சுழலில் இருந்து தீா்த்தங்கரா்கள் விடுதலை அடைந்து பிறப்பற்ற முக்தி நிலையை அடைவதாக நம்பப்படுகிறது. உலகில் சமண சமயக் கொள்கைகளை பரவச் செய்யும் நோக்கில், தீா்த்தங்கரா்கள் தோன்றுகின்றனா் என்பது சமண மத நம்பிக்கை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.