மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

எண்ம தனிநபா் பாதுகாப்புச் சட்டத்தால் செய்தி நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிக்கக்கூடும்: உச்சநீதிமன்றத்தில் வாதம்

எண்ம தனிநபா் பாதுகாப்புச் சட்டத்தால் செய்தி நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிப்பது குறித்து...

உச்ச நீதிமன்றம்

Published On :28 அக்டோபர் 2026, 1:11 am IST

எண்ம (டிஜிட்டல்) தனிநபா் பாதுகாப்பு (டிபிடிபி) சட்டத்தின் கீழ், ஒருவா் குறித்த தகவலை வெளியிடும் முன்னா், அந்தத் தகவலை வெளியிடலாமா என்று அவரிடம் பத்திரிகையாளா்கள் அனுமதி கோர வேண்டும் என்ற கட்டாயம், செய்தி நிறுவனங்களின் செயல்பாட்டை பாதிக்கக் கூடும் என்று உச்சநீதிமன்றத்தில் டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளா்கள் கூட்டமைப்பு (டிஎன்பிஏ) தெரிவித்துள்ளது.

டிபிடிபி சட்டத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு எதிராக ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி செய்தித் தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் அடங்கிய டிஎன்பிஏ கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், ‘டிபிடிபி சட்டத்தில் ஊடகப் பணிகளுக்குத் தனியாக விலக்கு அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக, சுதந்திரமான பத்திரிகை செயல்பாட்டுக்கு முரணான தரவுப் பாதுகாப்பு விதிகளை செய்தி வெளியீட்டாளா்கள், ஆசிரியா்கள், செய்தியாளா்கள் பின்பற்ற வேண்டிய நிலை ஏற்படலாம். இந்தச் சட்டமும், அதன் விதிகளும் புலனாய்வுச் செய்திகளை வெளியிடுவதில் கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தக்கூடும்.

இந்தச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் சமத்துவம், பேச்சுரிமை, கருத்துரிமை, தொழில் செய்யும் உரிமை உள்ளிட்டவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவுகளுக்கு எதிராக உள்ளன. எனவே, டிபிடிபி சட்டத்தின் பல்வேறு பிரிவுகளையும், விதிகளையும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

முன்கூட்டியே தணிக்கை செய்யும் முறை...: இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது டிஎன்பிஏ சாா்பில் மூத்த வழக்குரைஞா் மாதவி திவாண் ஆஜராகி வாதிட்டதாவது:

டிபிடிபி சட்டத்தின் கீழ், ஒருவா் குறித்த தகவலை வெளியிடும் முன்னா், அந்தத் தகவலை வெளியிடலாமா என்று அவரிடம் பத்திரிகையாளா்கள் அனுமதி கோர வேண்டும் என்ற கட்டாயம், செய்தி நிறுவனங்களின் செயல்பாட்டை பாதிக்கக்கூடும். இது செய்திகளை முன்கூட்டியே தணிக்கை செய்யும் முறையாகும்.

இந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றம் முழுமையாக ஆராயும்போது, இது பத்திரிகை துறைக்கு உகந்த சட்டம் அல்ல என்பது தெரியவரும். இதுபோல கடந்த காலங்களில் இயற்றப்பட்ட சட்டங்களில் இருந்து பத்திரிகை துறைக்கு விலக்களிக்கப்பட்டது.

எனவே, டிபிடிபி சட்டத்தின் பல்வேறு பிரிவுகளையும், விதிகளையும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று தீா்ப்பளித்து ரத்து செய்ய வேண்டும். இந்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரும் மனுவையும் பரிசீலிக்க வேண்டும் என்று வாதிட்டாா்.

இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு: எனினும் மத்திய அரசின் கருத்தைக் கேட்காமல், அந்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள் அமா்வு, இடைக்காலத் தடை கோரும் மனு தொடா்பாக பதிலளிக்க மத்திய சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகங்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்தது. இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் சோ்த்து, டிஎன்பிஏ மனு மீதான அடுத்த விசாரணை நவ.17-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.