மகரிஷி வால்மீகி ஜெயந்தி: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

மகரிஷி வால்மீகி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு தெரிவித்துள்ள வாழ்த்து குறித்து...

Maharishi Valmiki Jayanti

மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து - கோப்புப்படம்

Published On :26 அக்டோபர் 2026, 1:14 pm IST

மகரிஷி வால்மீகி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிரதமா் மோடி சுட்டுரையில் மக்களுக்கு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,

அனைத்து குடிமக்களுக்கும் மகரிஷி வால்மீகி ஜெயந்தி வாழ்த்துகள். மகரிஷி வால்மீகியின் உயர்ந்த சிந்தனைகள், நாட்டின் கலாசாரம், பாரம்பரியத்தின் அடிப்படை அம்சங்களாக திகழ்கின்றன என்றும், அவை அனைத்து காலங்களிலும் நாட்டை மேம்படுத்தி, செழுமைப்படுத்தும் என்று பிரதமர் கூறினார்.

மனித சமூகத்திற்கான அவருடைய விலைமதிப்பற்ற சிந்தனைகள் நாட்டு மக்களுக்கு எப்போதும் வழிகாட்டும் ஒளியாகச் சேவையாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகரிஷி வால்மீகியின் பெரும் கருணையைச் சுட்டிக்காட்டும் சமஸ்கிருத நீதிமொழியைப் பகிர்ந்துள்ள மோடி, அந்த கருணை தான் முதலாவது நீதிமொழி உருவாகுவதற்கும், ராமாயணத்தின் அடித்தளத்திற்கும் அடிப்படையாக அமைந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

The Prime Minister stated that Maharishi Valmiki’s noble thoughts have remained the fundamental elements of Indian culture and heritage, which will continue to nurture and enrich the nation across every era.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.