மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இஸ்ரேலில் இந்தியர் மாயம்: கண்டறிய உதவுமாறு குடும்பத்தினர் கோரிக்கை!

இஸ்ரேலில் காணாமல் போன இந்தியரைத் தேடிக் கண்டறிய உதவுமாறு இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு அவரது குடும்பத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.

Missing

மாயம்

Published On :26 அக்டோபர் 2026, 9:32 pm IST

இஸ்ரேலில் காணாமல் போன இந்தியரைத் தேடிக் கண்டறிய உதவுமாறு இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு அவரது குடும்பத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.

கர்நாடக மாநிலம், மங்களூரு அருகில் கொடக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஷத்ராக் இம்மானுவேல் (41). இஸ்ரேலில் பணிபுரியும் இவர், அக்டோபர் 16-ம் தேதிக்குப் பின் காணாமல் போனதாக அவரது மனைவி டெய்சி இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கும் மங்களூரு காவல்துறைக்கும் அவர் எழுதிய கடிதத்தில், தனது கணவர் ஷத்ராக் வேலை தேடி இஸ்ரேல் சென்றதாகவும்,

அக்டோபர் 21-ஆம் தேதியன்று இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கும், மங்களூரு காவல் துறைக்கும் அவர் எழுதிய கடிதத்தில், இந்த ஆண்டு மே 16-அன்று ஷத்ராக் வேலை தேடி இஸ்ரேல் சென்றதாகவும், அக். 16 அன்று இரவு 8.05 மணிக்கு அவர் கடைசியாக குடும்பத்தினருடனும் நண்பர்களுடன் கடைசியாகத் தொடர்பு கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அக்கடிதத்தில், “அதன்பின் வாட்ஸ் ஆப் அழைப்புகள் மற்றும் இஸ்ரேலில் உள்ள நண்பர்கள் மூலமாகவும் அவரைத் தொடர்புகொள்ள எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. அவரது எங்கு இருக்கிறார் என்பது பற்றியும், அவரது பாதுகாப்பு குறித்தும் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம்” என்று டெய்ஸி குறிப்பிட்டுள்ளார்.

மங்களூரைச் சேர்ந்த 'பெர்னாண்டஸ் குரூப்' என்ற வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம், இஸ்ரேலின் நசரேத் பகுதியில் உள்ள 'யுசிடி லிக்விட் சொல்யூஷன்ஸ்' நிறுவனத்தில் ஷத்ராக்குக்கு வேலை கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேலிய காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து, அவரைத் தேடிக் கண்டறிய உதவுமாறு அவரது மனைவி இந்தியத் தூதரகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.

அதேநேரம், அவர் பணிபுரியும் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு அவர் எப்போது கடைசியாகப் பணிக்குச் சென்றார், அவர் ஏதேனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா, அல்லது அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து விசாரித்து உறுதிப்படுத்துமாறும் அதிகாரிகளிடம் அவரது மனைவி கேட்டுக்கொண்டார்.

Summary

Indian goes missing in Israel: Family seeks help to locate him

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.