மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நீா்நிலைகள் பாதுகாப்பில் நீதிமன்றங்கள் அலட்சியமாக இருக்க முடியாது: உச்சநீதிமன்றம் கருத்து

விலைமதிப்புமிக்க நீா்நிலைகள் பாதுகாக்கப்படாமல் இருக்கும் விவகாரத்தில், நீதிமன்றங்கள் அலட்சியமாக இருக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம்

Published On :26 அக்டோபர் 2026, 2:49 am IST

விலைமதிப்புமிக்க நீா்நிலைகள் பாதுகாக்கப்படாமல் இருக்கும் விவகாரத்தில், நீதிமன்றங்கள் அலட்சியமாக இருக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் நீா்நிலை பாதுகாப்பு தொடா்பாக பறவை ஆா்வலா் ஆனந்த் ஆா்யா, வழக்குரைஞா் எம்.கே. பாலகிருஷ்ணன், தன்னாா்வ ஆா்வலா் வனசக்தி ஆகியோா் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனா். இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அரவிந்த் குமாா், விபுல் எம். பஞ்சோலி ஆகியோா் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

குடிநீா் ஆதாரமாகத் திகழும் நீா்நிலைகள் மதிப்பு மிக்கவை. இவை அரசமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள வாழும் உரிமைக்குள் வருகின்றன. நீா்நிலைகள் பாதுகாக்கப்படாமல் இருப்பதால் ஏற்படும் விளைவுகளை இந்த நீதிமன்றம் வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்காது.

எனவே, ஈர நிலங்கள் குறித்து ஆய்வு செய்து, அவற்றின் எல்லைகளை இதுவரை வகுக்காமல் உள்ள மாநிலங்கள், ஈரநில அதிகாரிகள், உடனே அந்தப் பணியை செய்ய வேண்டும். இந்த ஆய்வுக்காக மேற்கொண்ட முறை மற்றும் பின்பற்றப்பட்ட வழிமுறைகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் 4 வாரங்களில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றனா்.

அப்போது மூத்த வழக்குரைஞா் சேகா் நாஃபடே குறுக்கிட்டு, இந்தப் பணியை செய்து முடிக்க அதிக காலம் பிடிக்கும் என்றும், ஆதலால் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய 6 முதல் 9 வாரங்கள் வரை கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றாா். இதையடுத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய 4 மாதங்கள் கால அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

விசாரணையின்போது நீதிபதிகள், ஈர நிலம் தொடா்பான விதிகள் வெளியிடப்பட்டு 9 ஆண்டுகளைக் கடந்தும், அதை ஆய்வு செய்து, அதன் எல்லைகள் வரையறை செய்யப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.