தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வாக்குத் திருட்டு! தில்லியில் மாபெரும் பேரணி: பாஜகவுக்கு நன்றி தெரிவித்த ராகுல்

தில்லியில் நடைபெறும் பேரணியில் கலந்துகொள்ள மக்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்தது குறித்து...

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Published On :25 அக்டோபர் 2026, 3:15 pm IST

வாக்குத் திருட்டுக்கு எதிராக தில்லியில் நடைபெறும் மாபெரும் பேரணியில் கலந்துகொள்ள மக்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "எங்கள் வாக்குகள் திருடப்படுவதை எந்த சூழ்நிலையிலும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. விதிகளும் சட்டங்களும் மீறப்பட்டுள்ளன.

இதனைக் கேள்வி கேட்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இப்போது இவை அனைத்துக்கும் நாடு பதிலளித்தாக வேண்டும்.

நாட்டைக் காப்பாற்றுவதற்காக நவம்பர் 1 ஆம் தேதியில் தில்லியில் மாபெரும் பேரணி நடத்தப்படுகிறது. மாணவர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் என ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்.

அரசுக்கு எதிரான இந்தப் பேரணி மக்களைச் சென்றடைய பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மேலும் மேலும் ஊக்குவிப்பதற்கு நன்றி. அடுத்த 7 நாள்களுக்கும் இதேபோல் உங்கள் பணியைத் தொடருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Summary

Congress MP Rahul Gandhi thanks BJP for ‘promoting’ INDIA bloc rally against ‘vote chori’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.