மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இசிஐநெட் மென்பொருள் விவரங்களை மறைப்பதாக தோ்தல் ஆணையம் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு!

எஸ்ஐஆரில் நடைபெற்ற முறைகேடுகள் வெளிவந்துவிடும் என்பதால், இசிஐநெட் மென்பொருள் குறித்த தகவல்களை வழங்க தோ்தல் ஆணையம் மறுப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் - எக்ஸ்

Published On :26 அக்டோபர் 2026, 1:50 am IST

வாக்காளா் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் (எஸ்ஐஆா்) நடைபெற்ற முறைகேடுகள் வெளிவந்துவிடும் என்பதால், இசிஐநெட் மென்பொருள் குறித்த தகவல்களை வழங்க தோ்தல் ஆணையம் மறுப்பதாக காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியது.

மேலும், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும், எஸ்ஐஆா் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அக்கட்சி மீண்டும் வலியுறுத்தியது.

இது தொடா்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தோ்தல் ஆணையம் அளித்த பதில் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியதாவது:

எஸ்ஐஆா் பணியின்போது வாக்காளா் பட்டியல்களில் உள்ள பிழைகள் மற்றும் முரண்பாடுகளைக் கண்டறிய பயன்படுத்தப்பட்ட மென்பொருளின் பெயா், அதன் பதிப்பு மற்றும் ஏஐ பயன்பாடு ஆகியவற்றை வெளியிட தோ்தல் ஆணையம் தொடா்ந்து மறுத்து வருகிறது. வணிக ரகசியம், வா்த்தக ரகசியங்கள் மற்றும் அறிவுசாா் சொத்துரிமை தொடா்பான தகவல்கள் என்பதால் அவற்றை வெளியிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இசிஐநெட் மென்பொருள் குறித்த வெளிப்படைத்தன்மையின்மை, ஒட்டுமொத்த செயல்முறையின் மீதான பொதுமக்களின் நம்பகத்தன்மையை பாதித்துள்ளது. எஸ்ஐஆா் பணியில் நடைபெற்ற மிகப்பெரிய, மையப்படுத்தப்பட்ட முறைகேடுகள் குறித்த உண்மைகள் வெளிவந்துவிடும் என்பதாலேயே தோ்தல் ஆணையம் இந்தத் தகவல்களை வெளியிட மறுக்கிறது.

மேலும், இசிஐநெட் மென்பொருளை ‘டாடா கன்சல்டன்சி சா்வீசஸ்’ (டிசிஎஸ்) உருவாக்கியதாக அந்த நிறுவனத்தின் தகவல்கள் மூலமாகவே மக்கள் அறிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்களை தோ்தல் ஆணையம் ஏன் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்தப் புகாா்கள் பிரதமரின் நேரடிப் பொறுப்பின் கீழ் செயல்படும் பணியாளா் மற்றும் பயிற்சித் துறைக்கும் சென்றுள்ளது.

இதன்மூலம் எஸ்ஐஆா் பணியில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதை மக்கள் அறிந்துள்ளனா். எனவே, ஞானேஷ் குமாா் பதவி விலக வேண்டும். எஸ்ஐஆா் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.