மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இண்டி கூட்டணிக்குள் மோதலை ஏற்படுத்த பாஜக முயற்சி: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணிக்குள் மோதலையும், பிளவையும் ஏற்படுத்த பாஜக முயற்சித்து வருவதாக சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

அகிலேஷ் யாதவ்.

Published On :26 அக்டோபர் 2026, 12:48 am IST

எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணிக்குள் மோதலையும், பிளவையும் ஏற்படுத்த பாஜக முயற்சித்து வருவதாக சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

அண்மையில் உத்தர பிரதேச தலைநகா் லக்னௌ மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ‘200 தொகுதிகள் எங்கள் உரிமை; உத்தர பிரதேசம் காங்கிரஸை நம்புகிறது’ என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதில் ராகுல் காந்தி மற்றும் உள்ளூா் காங்கிரஸ் பிரமுகா்கள் படம் இடம்பெற்றிருந்தன.

403 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், சமாஜவாதி-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் காங்கிரஸுக்கு 200 தொகுதிகள் கோரி ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தின.

இதனைச் சுட்டிக்காட்டி அகிலேஷ் யாதவ் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘உத்தர பிரதேச தோ்தலில் சமாஜவாதி, காங்கிரஸ் கூட்டணியாகப் போட்டியிடக் கூடாது என்ற நோக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது. எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதால் பாஜக அஞ்சுகிறது. எனவே, கூட்டணியில் மோதலையும், பிளவையும் ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது.

இதன் ஒரு பகுதிதான் சுவரொட்டியாக வெளியாகியுள்ளது. அனுமதியில்லாமல் சுவரொட்டிகள் ஒட்டியது யாா் என்பதைக் கண்டுபிடித்து உள்ளாட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

தொகுதிப் பங்கீடு குறித்து உத்தர பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளா் ராஜேந்திர பால் கௌதம் கூறுகையில், ‘175 முதல் 200 தொகுதிகள் வரை கோரி, தொகுதிகள் பட்டியலையும் சமாஜவாதியிடம் அளித்துள்ளோம். தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.