மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிரதமர் மோடி நாளை உத்தரப் பிரதேசம், ஒடிசாவுக்குப் பயணம்!

உத்தரப் பிரதேசம், ஒடிசாவில் பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கிவைக்கிறார்.

PM Modi

பிரதமர் மோடி

Published On :24 அக்டோபர் 2026, 4:32 pm IST

பிரதமர் நரேந்திர மோடி நாளை (அக். 25) உத்தரப் பிரதேசம், ஒடிசாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். 

காலை 11 மணியளவில், வாரணாசியில் உள்ள அரவிந்த் லிமிடெட்டின் புதிய ஆடை உற்பத்தி ஆலையைப் பிரதமர் திறந்து வைப்பார். அதனைத் தொடர்ந்து, மதியம் சுமார் 1 மணியளவில் நமோ காட்டில் இந்திய விமானப்படையின் வானூர்தி சாகசக் காட்சிகளைக் காண்பார், மேலும் புவனேஸ்வரில் இந்திய ரிசர்வ் வங்கியின் தரவு மையம் மற்றும் இணையப் பாதுகாப்புப் பயிற்சி நிறுவனத்தையும் திறந்து வைப்பார். 

இந்த ஆடை உற்பத்தி ஆலை, இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை உற்பத்திச் சூழலமைப்பை வலுப்படுத்தி, அப்பகுதியில் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும். 
நவீன உற்பத்தி முறைகளில் கவனம் செலுத்தும் இந்த ஆலை, குறிப்பாகப் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி, பிராந்தியத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும்.

உலகளாவிய வாடிக்கையாளர் தளத்தைக் கொண்டிருப்பதால், வாரணாசியில் தயாரிக்கப்படும் பொருள்கள் சர்வதேச சந்தைகளைச் சென்றடையவும் இது வழிவகுக்கும்.

அதன்பிறகு, மோடி ஒடிசாவுக்குச் செல்வார். அங்கு மாலை 4.45 மணியளவில் புவனேஷ்வரில் இந்திய ரிசர்வ் வங்கியின் தரவு மையம் மற்றும் சைபர் பாதுகாப்பு பயிற்சி நிறுவனத்தைத் திறந்து வைத்து, உரையாற்றுவார். இவ்வாறு பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PM Modi to visit Uttar Pradesh and Odisha on October 25

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.