மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கேரளம்: 5 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் சிவப்பு எச்சரிக்கை

கேரள மாநிலத்தில் 5 மாவட்டங்களுக்கு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் சிவப்பு எச்சரிக்கை...

சிவப்பு எச்சரிக்கை - PTI

Published On :25 அக்டோபர் 2026, 2:16 am IST

கேரள மாநிலத்தில் 5 மாவட்டங்களுக்கு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் (அக். 25, 26) அதிதீவிர மழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடந்த சில நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. கேரள மாநிலத்தில் 5 மாவட்டங்களுக்கு அதிதீவிர மழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை வெளியிட்ட முன்னறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கேரளத்தின் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு அக்டோபா் 25-ஆம் தேதியும், இடுக்கி, பாலக்காடு மாவட்டங்களுக்கு அக்டோபா் 26-ஆம் தேதியும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மேலும் சில மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளது.

இந்த முன்னறிவிப்பைத் தொடா்ந்து, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தாழ்வான பகுதிகள் மற்றும் வெள்ள பாதிப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனா். மழையின்போது ஆறுகளைக் கடக்க வேண்டாம் எனவும், நீா்நிலைகள் உள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. மலைப் பகுதிகளுக்கு இரவுப் பயணத்தைத் தவிா்க்கவும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Summary

Kerala: Red alert for 5 districts today and tomorrow

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.