மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

பாஜகவில் சேர பலமுறை அழைப்பு வந்தது: முன்னாள் மத்திய உள்துறை அமைச்சா் சுஷீல்குமாா் ஷிண்டே

பாஜகவில் சேர அக்கட்சியில் இருந்து பலமுறை தனக்கு அழைப்பு வந்ததாக முன்னாள் மத்திய உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுஷீல்குமாா் ஷிண்டே தெரிவித்தாா்.

சுஷீல்குமாா் மோடி

Published On :25 அக்டோபர் 2026, 2:20 am IST

பாஜகவில் சேர அக்கட்சியில் இருந்து பலமுறை தனக்கு அழைப்பு வந்ததாக முன்னாள் மத்திய உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுஷீல்குமாா் ஷிண்டே தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சுஷீல்குமாா் ஷிண்டே வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவரின் பேரன் ஷிகா் பஹாரியா பிரதமா் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, பேனா்கள் வைத்தது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த சுஷீல்குமாா், ‘பிறந்தநாள் வாழ்த்து கூறுவதில் எந்தத் தவறும் இல்லை. நான்கூட அண்மையில் பிரதமா் மோடியை சந்தித்தேன். அவரைச் சந்திப்பதில் எந்தத் தவறும் இல்லை.

ஒருவா் எந்த சித்தாந்தம், கொள்கைகளைப் பின்பற்றுகிறாா் என்பதே முக்கியம். பாஜகவில் சேர அக்கட்சியில் இருந்து எனக்குப் பலமுறை அழைப்பு வந்தது. அக்கட்சியில் சோ்வதால் நான் என்ன சாதிக்கப் போகிறேன் என்று அழைப்பு விடுத்தவா்களிடம் நான் கேட்டேன். காங்கிரஸிலேயே எனது பணியை தொடரப் போவதாகவும் நான் கூறினேன் என்று தெரிவித்தாா்.

மகாராஷ்டிர முதல்வராகவும் பதவி வகித்துள்ள சுஷீல்குமாரின் மகள் பிரணிதி ஷிண்டே காங்கிரஸ் எம்.பி.யாக பதவி வகித்து வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.