மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

குஜராத்தில் பல்கலை. மாணவர்களின் தற்கொலையை தடுக்க ‘ஸ்பிரிங்’ மின்விசிறிகள்!

குஜராத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகம், தனது கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் வகையில், சீலிங் மின்விசிறியில் ஸ்ப்ரிங்கை பொருத்தியுள்ளதைப் பற்றி...

மின் விசிறியின் பயன்பாடு குறித்து செய்து காண்பித்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் கிஷோர்சிங் சாவ்தா.

Published On :23 அக்டோபர் 2026, 9:42 pm IST

குஜராத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகம், தனது கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்கும் வகையில், சீலிங் மின்விசிறியில் ஸ்ப்ரிங்கை பொருத்தியுள்ளது.

ஐஐடி - ஜேஇஇ நுழைவுத் தேர்வு, நீட் நுழைவுத் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

நாட்டின் பல மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள் தலைநகர் தில்லி, ராஜஸ்தான், மும்பை, சென்னை போன்ற முன்னணி நகர்களில் உள்ள தனியார் பயிற்சி மையங்களில் தங்கிப் படிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தேர்வுகளில் ஏற்படும் முறைகேடுகள், தேர்வு குளறுபடிகள், தேர்வில் தோல்வி போன்ற காரணங்களால் மாணவர்கள் பலர் தங்கள் உயிரை நீத்துக்கொள்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 170-க்கும் அதிகமான ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்தாகத் தரவுகள் தெரிவித்து அதிர்ச்சியளிக்கின்றன.

இந்த நிலையில், குஜராத்தின் சூரத்தில் வீர நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் ஐந்து பெண்கள் விடுதிகளும் நான்கு ஆண்கள் விடுதிகளும் உள்ளன.

விடுதிகளில் மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்கொலைகளைத் தடுக்கும் வகையில், வீர நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழகத்தின் விடுதிகளில் 354 ஸ்பிரிங் மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன.

தலா ரூ. 1500 வீதம் 354 மின்விசிறிகளுக்கு சுமார் ரூ. 5.31 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இந்த மின் விசிறியில் 10 கிலோவுக்கு மேல் பொருள் வைப்பட்டாலே அது தானாக கீழே வந்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மின் விசிறியின் பயன்பாடு குறித்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் கிஷோர்சிங் சாவ்தா செய்து காண்பித்தார்.

மாணவர்கள் எதிர்கொள்ளும் கல்வி அழுத்தம் மற்றும் மனநலப் பிரச்சினைகளைக் கருத்தில் கொள்ளாமல், மின்விசிறிகளை மாட்டுவது மட்டும் போதுமா? என்று சமூக வலைதளவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Summary

To prevent incidents of suicide by hanging, a prominent public university in Gujarat is in the process of replacing all ceiling fans in its hostel rooms with special “anti-suicide” spring-loaded fans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.