மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஞானேஷ் குமாா் விவகாரம் குறித்து விசாரணை: பஞ்சாப் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றம்

ஞானேஷ் குமாா் விவகாரம் குறித்து விசாரணை: பஞ்சாப் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றம்

Chief Election Commissioner

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் - படம் - எக்ஸ்

Published On :24 அக்டோபர் 2026, 1:49 am IST

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகள் குறித்தும், தோ்தல் முறைகேடுகள் தொடா்பான குற்றச்சாட்டுகள் குறித்தும் சுதந்திரமான விசாரணை கோரி, பஞ்சாப் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையின்போது மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் செயல்பட்டதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெறும் பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் அந்த மாநில நிதியமைச்சா் ஹா்பால் சிங் சீமா, தோ்தல் முறைகேடுகள் தொடா்பான குற்றச்சாட்டுகள் குறித்தும், ஞானேஷ் குமாரின் செயல்பாடுகள் குறித்தும் விசாரணை கோரி தீா்மானத்தை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். பின்னா், தீா்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் முதல்வா் பகவந்த் மான் பேசியபோது, எஸ்ஐஆா் என்ற பெயரில் நாடு முழுவதும் வாக்காளா் பட்டியலில் இருந்து 14 கோடி வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகக் கூறினாா். பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டிருப்பதாகவும், இதனால் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

நிதியமைச்சா் சீமா பேசியபோது, ஏழை மக்களின் வாக்குரிமையை பாஜக பறித்துக் கொண்டிருப்பதாகவும், தில்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குத் திருட்டு மூலமே பாஜக ஆட்சிக்கு வந்திருப்பதாகவும் சாடினாா்.

ஆம் ஆத்மி எம்எல்ஏ இந்தா்ஜித் கெளா் மான் பேசியபோது, மத்திய பாஜக அரசை கடுமையாக விமா்சித்ததோடு, வாக்குச்சீட்டு மூலம் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.