மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சைபர் மோசடிக்கு உடந்தை! இருவர் கைது! சிக்கியது எப்படி?

வங்கிக் கணக்குகள் மூலம் சைபர் குற்றவாளிகளுக்கு உதவியவர்கள் பற்றி..

cyber fraud

சைபர் மோசடி - IANS

Published On :23 அக்டோபர் 2026, 4:13 pm IST

சைபர் மோசடி செய்பவர்களுக்கு வங்கிக் கணக்குகளைக் விற்று, மோசடிக்கு உடந்தையாக இருந்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அதிக லாபம் தருவதாகக் கூறி நபர் ஒருவரிடம் ரூ. 15.83 லட்சம் மோசடி செய்த வழக்கில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நிகில் என்பவர் அளித்த புகாரின்படி, அக் 5 அன்று தில்லியின் வடகிழக்கு மாவட்ட சைபர் காவல் நிலையத்தில் மின்னணு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின்போது, மோசடி செய்யப்பட்ட தொகையில் ரூ. 9.60 லட்சம் தனியார் நிறுவனம் ஒன்றின் பெயரிலிருந்த வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஹிமான்ஷு குமார் (23) என்பது தெரிய வந்தது.

ஹிமான்ஷு தனது வங்கி ஆவணங்களையும், அதனுடன் இணைக்கப்பட்ட சிம் கார்டையும் தனது உறவினரான அங்கித் குமார்(30) என்பவரிடம் ரூ. 25 ஆயிரத்துக்கு வழங்கியது தெரிய வந்தது.

அங்கித், சைபர் மோசடி செய்பவர்களுக்கு வங்கிக் கணக்குகளை ஏற்பாடு செய்து, அவற்றை மற்ற கூட்டாளிகளுக்கு வழங்கி, ஆன்லைன் மோசடிகளுக்கு உதவியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இதற்கு முன்பு எந்தக் குற்றப் பின்னணியும் இல்லை.

இவர்களிடமிருந்து, சட்டவிரோதச் செயல்கள் தொடர்பான உரையாடல்கள் அடங்கிய இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.