தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குஜராத் பயணம் நிறைவு! தாயகம் புறப்பட்டார் அமெரிக்க அமைச்சர் ரூபியோ!

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ இந்திய பயணத்தை நிறைவு செய்துள்ளது குறித்து...

Rubio concludes India visit

மும்பையில் உள்ள இந்தியா கேட் பகுதியில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் - எக்ஸ்

Published On :22 அக்டோபர் 2026, 5:24 pm IST

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இந்திய பயணத்தை நிறைவு செய்து அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் அவரின் மனைவி ஜெனட் ரூபியோ ஆகியோர் அரசு முறைப் பயணமாகக் கடந்த அக். 20 ஆம் தேதி மும்பை வந்தடைந்தனர்.

மும்பையில் உள்ள இந்தியா கேட், தாஜ் ஹோட்டல் ஆகிய இடங்களைப் பார்வையிட்ட அவர், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை நேரில் சந்தித்து வர்த்தகம், முதலீடு, பொருளாதாரம் ஆகிய துறைகளில் இருநாடுகளின் உறவுகள் குறித்து உரையாடினார்.

மும்பை பயணத்தில், இந்தியத் தொழிலதிபர்கள் கௌதம் அதானி மற்றும் டாடா நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரன் ஆகியோரையும் அவர் சந்தித்து உரையாடினார்.

இதையடுத்து, குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்தை அமைச்சர் ரூபியோ நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், அந்நிறுவனத்தின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவர் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வெனிசுவேலாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் உலகின் மிகப் பெரிய சுத்தகரிப்பு நிலையத்தில் சுத்தகரிப்பு செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அமைச்சர் ரூபியோ கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

US Secretary of State Marco Rubio has reportedly left for the United States after completing his visit to India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.