தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இன்று இந்தியா வருகை! மும்பை 26/11 தாக்குதலில் பலியான வீரர்களுக்கு நினைவஞ்சலி!

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்தியா வருகை தருவது குறித்து...

US Secretary of State Marco Rubio

மார்கோ ரூபியோ - கோப்புப் படம்

Published On :20 அக்டோபர் 2026, 4:59 am IST

இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இன்று (அக். 20) இந்தியாவுக்கு வருகிறார்.

கடந்த மே மாதம், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளை உறுப்பினா்களாக கொண்ட நாற்கர (க்வாட்) நாடுகள் அமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வந்த ரூபியோ, தற்போது இரண்டாவது முறையாக பயணம் மேற்கொள்கிறாா்.

இந்தியா - அமெரிக்கா இடையிலான எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, முக்கிய தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ரூபியோ இன்று இந்தியா வருகிறார். அவருடன் அந்நாட்டு வர்த்தக பேச்சுவார்த்தைக் குழுவினரும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பைக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் ரூபியோ வருவார் என்றும், தொடர்ந்து இந்தியா - அமெரிக்கா இடையிலான நல்லுறவை வலுப்படுத்துதல் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து, அமெரிக்கர்கள் உள்பட 160-க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த மும்பை 26/11 தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தாஜ் நினைவிடம் செல்லவிருக்கிறார். இந்தியாவில் மார்கோ ரூபியோ 3 நாள் பயணம் செய்யவிருக்கிறார்.

Summary

US Secretary of State Marco Rubio To Begin 3-Day India Tour Today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.