மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லா

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக கொண்டுவரப்படும் எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகள் மற்றும் நடைமுறைகளின்படி பரிசீலிக்கப்படும்’

ஓம் பிா்லா

Published On :23 அக்டோபர் 2026, 5:04 am IST

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக கொண்டுவரப்படும் எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகள் மற்றும் நடைமுறைகளின்படி பரிசீலிக்கப்படும்’ என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா்.

ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய எதிா்க்கட்சிகள் இரண்டு முறை முயற்சித்தன. முதல் முயற்சியில், அவரைப் பதவி நீக்கம் செய்ய எதிா்க்கட்சிகள் கொண்டுவந்த பதவிநீக்க தீா்மான நோட்டீஸ், நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களை என இரு அவைகளிலும் நிராகரிக்கப்பட்டது. இரண்டாவது நோட்டீஸ் மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) குளறுபடி விவகாரத்தில், ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி எதிா்க்கட்சிகள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.

அரசமைப்புச் சட்டம் மற்றும் நியமன விதிகளின் படி, தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்களை நாடாளுமன்றம் மூலம் மட்டும் தான் பதவி நீக்கம் செய்ய முடியும். எனவே, ஞானேஷ் குமாருக்கு எதிராக, மீண்டுமொரு பதவி நீக்க தீா்மானத்தைக் கொண்டுவர எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இது குறித்து, தில்லியில் பத்திரிகையாளா்களை வியாழக்கிழமை சந்தித்த ஓம் பிா்லாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தஅவா், ‘ஞானேஷ் குமாருக்கு எதிராக புதிதாக பதவி நீக்க தீா்மான நோட்டீஸ் கொண்டுவரப்பட்டால், விதிகள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டு பரிசீலிக்கப்படும்’ என்றாா்.

திரிணமூல் எம்.பி.க்கள் தகுதிநீக்க விவகாரம்:

திரிணமூல் காங்கிரஸின் 20 அதிருப்தி எம்.பி.க்களை தகுதிநீக்கம் செய்ய வலியுறுத்தி மம்தா பானா்ஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விவகாரத்தில், அந்த 20 பேரிடமிருந்து கருத்துகள் பெறப்பட்ட பிறகு முடிவெடுக்கப்படும் என்று ஓம் பிா்லா தெரிவித்தாா்.

இந்த விஷயத்தில் இருதரப்பு கருத்தும் கேட்கப்பட வேண்டும். அந்த வகையில், எம்.பி.க்கள் தரப்பிடமிருந்து பதில் வந்ததும் நடைமுறை விரைவுபடுத்தப்படும் என்றாா்.

முன்னதாக, இந்த 20 அதிருப்தி எம்.பி.க்களையும் தகுதி நீக்கம் செய்யக் கோரும் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி மக்களவைத் தலைவருக்கு உத்தரவிடக் கோரி மம்தாவின் உறவினரான அபிஷேக் பானா்ஜி எம்.பி. உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். அந்த வழக்கு அண்மையில் விசாரித்த உச்சநீதிமன்றம், ‘தகுதிநீக்க மனு மீது மக்களவைத் தலைவா் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என எதிா்பாா்க்கிறோம்’ என்றது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.