மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜபல்பூரில் துர்க்கை சிலை ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலி, 6 பேர் காயம்!

துர்க்கை சிலை ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து பலியானது பற்றி...

Jabalpur

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் - PTI

Published On :22 அக்டோபர் 2026, 12:38 pm IST

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில், நவராத்திரி விழாவிவைத் தொடர்ந்து துர்க்கை சிலை கரைப்பின்போது டிராக்டர்-டிராலியின் மீது மின்சாரக் கம்பி விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். மேலும் ஆறு பேர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் வியாழக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள மஜௌலி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நள்ளிரவு 12.05-க்கு நிகழ்ந்தது. 50-க்கும் மேற்பட்டோர் துரக்கை சிலையை சிவில் லைத் பகுதியிலிருந்து நரிலி குளத்தில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் சென்று கொண்டிருந்தனர்.

சிலையை ஏற்றிச் சென்ற டிராக்டர் செல்வதற்காக, மேலே தொங்கிக்கொண்டிருந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பியை குச்சியால் தூக்கிப் பிடிக்க முயன்றனர். அப்போது, ​​கம்பி உயர் அழுத்த மின் பாதையுடன் தொடர்பு கொண்டது. எனவே, மின்சாரம் பாய்ந்ததும் அந்தக் கம்பி அறுந்து டிராக்டர்-டிராலியின் மீது விழுந்தது.

டிராக்டரில் அமர்ந்திருந்த விகாஸ் ராஜ்புத் (22) மற்றும் பிரின்ஸ் சவுகான் (23) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று காவல் துணை கோட்ட அதிகாரி மோஹந்தி மராவி தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, வியாழக்கிழமை காலை மஜௌலியில் உள்ளூர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுப் போராட்டம் நடத்தினர்.

தாழ்வாகத் தொங்கும் மின்சாரக் கம்பிகள் குறித்து தாங்கள் ஏற்கெனவே காவல்துறை, நிர்வாக அதிகாரிகள் மற்றும் விழா ஏற்பாட்டுக் குழுவினரிடம் தெரிவித்திருந்ததாகவும், அவற்றைச் சரிசெய்யுமாறு வலியுறுத்தியிருந்ததாகவும் உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டினர்.

உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.