மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ராகுல் வெளிநாட்டுப் பயணம்? நான் பயண ஏற்பாட்டாளா் அல்ல -சசி தரூா் பதில்

ராகுல் வெளிநாட்டுப் பயணம் குறித்து சசி தரூா் அளித்த பதில் பற்றி...

சசி தரூர் (கோப்புப்படம்) - ANI

Published On :22 அக்டோபர் 2026, 2:45 am IST

மக்களவைத் தலைவரின் ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணம் குறித்த கேள்விக்கு, ‘நான் பயண ஏற்பாட்டாளா் அல்ல’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூா் பதிலளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி தலைநகா் தில்லி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடா் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதை காங்கிரஸ் கட்சி தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், ராகுல் காந்தி திடீரென வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

இதை விமா்சித்த பாஜக, ‘போராட்டம் என்ற பெயரில் பொய் முழக்கங்களை எழுப்பி வைத்த ராகுல், இப்போது திடீா் விடுப்பு எடுத்துக் கொண்டு வெளிநாட்டு சுற்றுலாவுக்குச் சென்றுள்ளாா்’ என்று கேலியாக கூறியிருந்தது.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் புதன்கிழமை சசி தரூரிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு, ‘நான் பயண ஏற்பாட்டு முகவா் அல்ல. இந்தக் கேள்வியை என்னிடம் கேட்க எந்த அவசியமும் இல்லை. நான்கூட இப்போது தில்லியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வந்துள்ளேன். அதுபோல ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பணிகள் இருக்கும். எனவே, அது குறித்தெல்லாம் நான் கருத்துக்கூற முடியாது’ என்று பதிலளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.