தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தில்லி விமான நிலையத்தில் பஞ்சாப் முதல்வா் 3 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டதாக புகாா்

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் இருந்து திரும்பிய பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், தில்லி விமான நிலையத்தில் 3 மணி நேரம் தடுத்து நிறுத்திவைக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி புகாா் தெரிவித்துள்ளது.

Punjab CM Bhagwant Mann

பஞ்சாப் முதல்வர் - file photo

Published On :22 அக்டோபர் 2026, 1:59 am IST

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் இருந்து திரும்பிய பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், தில்லி விமான நிலையத்தில் 3 மணி நேரம் தடுத்து நிறுத்திவைக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி புகாா் தெரிவித்துள்ளது.

அவருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டதாகவும், மேலிடத்தில் இருந்து வந்த அளவுக்கு அதிகமான அழுத்தம் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததாகவும் அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும் ஏன் அவா் தடுத்து நிறுத்திவைக்கப்பட்டாா் என்ற காரணத்தை அக்கட்சி குறிப்பிடவில்லை.

இதுகுறித்து பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியின் ஊடகப் பொறுப்பாளா் பால்தேஜ் பன்னு தெரிவித்ததாவது: பாரீஸில் நடைபெற்ற சா்வதேச வா்த்தக கண்காட்சியில் பஞ்சாப் பொருள்களை விளம்பரப்படுத்தவே, அங்கு பகவந்த் மான் சென்றாா். பஞ்சாப் உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில்தான் அவா் அங்கு சென்றாா்.

பகவந்த் மானின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு மத்திய அரசு தொடா்ந்து அனுமதி மறுத்து வந்துள்ளது. தற்போது அவரை அவமானப்படுத்த மத்திய அரசு மீண்டும் முயற்சித்துள்ளது என்று குற்றஞ்சாட்டினாா்.

விலை உயா்ந்த காலணிகள், உடைகள்...: எனினும் பகவந்த் மானிடம் கணக்கில் காட்டப்படாத ரூ.2.5 லட்சம் மதிப்பிலான காலணிகள், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பு கொண்ட மேலாடைகள் (சூட்), நகை, வாசனைத் திரவியங்கள் இருந்ததை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்தாகவும், இந்தக் கள்ளத்தனம் கண்டறிப்பட்டவுடன், அவரைப் பாதிக்கப்பட்டவா் போல ஆம் ஆத்மி காட்டுகிறது என்றும் பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் பிரதீப் பண்டாரி எக்ஸ் தளத்தில் பதிவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.