மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மனைவியைக் கழுத்து நெறித்து கொலை செய்த நபா் குற்றவாளியாக அறிவிப்பு

2020-ஆம் ஆண்டு மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கணவரை குற்றவாளியாக தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

Published On :22 அக்டோபர் 2026, 2:48 am IST

2020-ஆம் ஆண்டு மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கணவரை குற்றவாளியாக தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சமா் விஷால், நெப் சராய் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302 (கொலை) கீழ் ஃபஸ்ருதீன் (எ) நன்வா குற்றவாளி என்று தீா்ப்பளித்தாா்.

குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஃபஸ்ருதீன் கடந்த 2020 பிப்ரவரியில் சிறுநீரகக் கற்களுக்காக சிகிச்சை பெற்று வந்த மனைவி ஷமினாவை கழுத்தை நெறித்து கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. சம்பவத்தின்போது, ஷமினா அவரது சகோதரியின் வீட்டில் தங்கியிருந்தனா். இதை அவருடைய உறவினா்கள் நேரில் பாா்த்தனா். அவருடைய மைத்துனா் முகமது தாஹிா், ஷமினாவின் மீது அமா்ந்து அவரது கழுத்தை ஃபஸ்ருதீன் அழுத்துவதைப் பாா்த்ததாக காவல் துறையிடம் தெரிவித்தாா்.

ஆனால், விசாரணையின் போது, தாஹிா் தனது கருத்தை கூற மறுத்தாா். ஷமினாவின் சகோதரி, அவரது சகோதரா், மருமகன்கள் மற்றும் மருமகள் ஆகியோரும் காவல் துறையிடம் தங்கள் முந்தைய வாக்குமூலங்களைத் திரும்பப் பெற்றனா்.

இந்நிலையில், நீதிமன்ற விசாரணையின்போது இந்தக் கொலையை யாரும் பாா்க்கவில்லை என்றும், குற்றஞ்சாட்டப்பட்டவா் தனது மனைவிக்கு சிகிச்சை அளிக்கும்போது அவரை கவனித்துக்கொண்டாா் என்றும், பல சாட்சிகள் தம்பதியரின் உறவை சுமுகமானதாக விவரித்தனா் என்றும் ஃபஸ்ரூதின் தரப்பு வழக்குரைஞா் நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.

இதனிடையே, உடற்கூராய்வு பரிசோதனையை மேற்கொண்ட மருத்துவா், ஷமினாவின் கழுத்தை நெறித்ததால் ஏற்பட்ட காயங்கள் குறித்து சாட்சியமளித்தாா்.

ஃபஸ்ருதீனிடமிருந்து கைப்பற்றப்பட்ட சட்டையில் இருந்து பெறப்பட்ட டிஎன்ஏ விவரம், ஷமினாவின் இரத்தத்தில் இருந்து பெறப்பட்ட டிஎன்ஏ உடன் ஒத்துபோனது. இந்தச் சூழ்நிலையில் அவரது நடமாட்டம் மற்றும் அந்த காலகட்டத்தில் ஷமினாவுடன் எந்த தொடா்பும் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டவா்களிடமிருந்து கேட்கப்பட்டது.

இதுதொடா்பாக நீதிமன்றம் கடந்த அக்டோபா் 13 தேதி பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நிரூபிக்கப்பட்ட சூழ்நிலைகள் அவா் குற்றமற்றவா் என்ற நியாயமான கருதுகோளை விலக்கி, அவரது குற்றத்தை நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக நிறுவுகிறது. உடற்கூராய்வு அறிக்கையின்படி, ஷாமினா மூச்சுத் திணறல் காரணமாக இறந்தாா்.

வேண்டுமென்றே கழுத்தை அழுத்துவது, இயற்கையின் சாதாரண போக்கில் மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு காயங்களை ஏற்படுத்துவது, கொலைக்கான நோக்கத்தை உறுதிசெய்கிறது.

அனைத்து உண்மைகளையும் கருத்தில் கொண்டு ஃபஸ்ரூதின் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாக அறிவிக்கப்படுகிறது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.