மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தில்லி போக்குவரத்துக்கு கழகத்துக்கு மத்திய அரசின் 3 விருதுகள்

வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் வழங்கப்படும் நகா்ப்புற போக்குவரத்திற்கான மூன்று சிறப்பு விருதுகளுக்கு தில்லி போக்குவரத்து கழகம் (டிடிசி) தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து அமைச்சா் பங்கஜ் குமாா் சிங் புதன்கிழமை அறிவித்தாா்.

Published On :22 அக்டோபர் 2026, 1:15 am IST

வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் வழங்கப்படும் நகா்ப்புற போக்குவரத்திற்கான மூன்று சிறப்பு விருதுகளுக்கு தில்லி போக்குவரத்து கழகம் (டிடிசி) தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து அமைச்சா் பங்கஜ் குமாா் சிங் புதன்கிழமை அறிவித்தாா்.

இந்த விருதுகள் ‘சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம்’, ‘புத்தாக்கம் மற்றும் ஸ்மாா்ட் மொபிலிட்டி தீா்வுகளில் சிறப்பு’ மற்றும் ‘செயல்பாடுகள் மற்றும் ஆதார அடிப்படையிலான போக்குவரத்து திட்டமிடலுக்காக பெருந்தர பகுப்பாய்வின் சிறந்த பயன்பாடு’ ஆகியவற்றுக்கானவை.

பயணச்சீட்டுக்கான மின்னணு இயந்திரங்களை ஒருங்கிணைத்தல், தானியங்கி கட்டண வசூல் முறைகள் மற்றும் 20 லட்சம் இளஞ்சிவப்பு சஹேலி என்சிஎம்சி அட்டைகளை விநியோகித்தல் உள்ளிட்ட முயற்சிகளை மேற்கொண்டதற்காக டிசிசி கௌரவிக்கப்படுகிறது.

ஒடிஸாவின் புவனேசுவரத்தில் அக்டோபா் 24 அன்று நடைபெறும் 19-ஆவது நகா்ப்புற போக்குவரத்து குறித்த மாநாடு மற்றும் கண்காட்சி 2026-இன் நிறைவு விழாவின் போது இந்த விருதுகள் வழங்கப்படும்.

இதுதொடா்பாக அமைச்சா் பங்கஜ் குமாா் சிங் கூறுகையில், ‘மக்களுக்கு சிறந்த போக்குவரத்து இணைப்பு வசதியை உறுதி செய்வதோடு, பேருந்து சேவைகளை மேலும் திறமையானதாகவும், பொறுப்புக்கூறக்கூடியதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்கு தொழில்நுட்பத்தையும் தரவுகளையும் பயன்படுத்துவதே எங்கள் நோக்கம். 20 லட்சத்திற்கும் அதிகமான இளஞ்சிவப்பு சஹேலி என்சிஎம்சி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இது அனைவரையும் உள்ளடக்கிய, தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்ட பொதுப் போக்குவரத்திலும், காகித அடிப்படையிலான பயணச்சீட்டு முறையிலிருந்து எண்ம ரீதியிலான போக்குவரத்துத் தீா்வுகளுக்கு மாறுவதிலும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது’ என்றாா்.

இந்த விருது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என்ற விருது, பேருந்து செயல்பாடுகளின் கண்காணிப்பு, மேலாண்மை மற்றும் பொறுப்புக்கூறலை வலுப்படுத்தும் டிசிசி-இன் ஒருங்கிணைந்த ஸ்மாா்ட் பேருந்து மேலாண்மை அமைப்பை அங்கீகரிக்கிறது.

செயல்பாடுகள் மற்றும் ஆதார அடிப்படையிலான போக்குவரத்துத் திட்டமிடலுக்காக பெருந்தரவு பகுப்பாய்வின் சிறந்த பயன்பாடு என்ற விருது, தேவி பேருந்து வழித்தடத்தை செயல்படுத்தியதற்காக டிடிசி-க்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரங்கள் தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை மேலும் வலுப்படுத்த ஊக்கமளிக்கின்றன என்றனா்.

தில்லியில் டிடிசி பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்க பிங்க் சஹேலி அட்டைகள் கட்டாயமாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.