மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!

தங்களுக்கு வழங்கப்பட்ட நீதிமன்றக் காவலுக்கு எதிராக சிஜேபி தலைவர்கள் அசுதோஷ், சௌரவ் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது குறித்து...

CJP leaders Saurav Das and Ashutosh Ranga.

சிஜேபி தலைவர்களான சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா. - படம் - பிடிஐ

Published On :20 அக்டோபர் 2026, 9:50 pm IST

தங்களுக்கு வழங்கப்பட்ட நீதிமன்றக் காவலுக்கு எதிராக சிஜேபி தலைவர்கள் அசுதோஷ், சௌரவ் ஆகியோர் தில்லி உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (அக். 20) அவசர மனுதாக்கல் செய்துள்ளனர்.

அக். 13 ஆம் தேதி ஜந்தர் மந்தருக்குள் அத்துமீறி நுழைந்த விவகாரத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர்கள் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து, சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா இருவரையும் ஐந்து நாள்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த ஐந்து நாள் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் மேலும் இரண்டு நாள்கள் நீட்டிக்கப்பட்டு நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து சிஜேபி சட்டக் குழுவின் தலைவர் ரத்னா சிங் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

நாங்கள் தில்லி உயர் நீதிமன்றத்தை அணுகி, அவசர இரவு விசாரணைக்குக் கோரிக்கை விடுத்துள்ளோம். சௌரவும் அசுதோஷும் ஒரு நிமிடம் கூட சிறையில் கழிக்கக் கூடாது. அரசியல் விளையாட்டுகளுக்காக அவர்களின் சுதந்திரம் பறிக்கப்படக் கூடாது. நீதி காத்திருக்கக் கூடாது என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, வரும் தீபாவளி முடியும் வரை எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்கப் போவதில்லை என சிஜேபியின் தலைவர் அபிஜீத் தீப்கே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

CJP leaders Ashutosh and Saurav filed a petition in the Delhi High Court on Monday (Oct. 20) against the judicial custody granted to them.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.