மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டேட்டா இல்லாத புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்திய ஏர்டெல்!

டேட்டா இல்லாத புதிய ரீசார்ஜ் திட்டங்களை ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது குறித்து...

Airtel

ஏர்டெல் - கோப்புப் படம்

Published On :19 அக்டோபர் 2026, 5:36 pm IST

கைப்பேசிகளில் குரல் அழைப்பு மற்றும் குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) சேவைகள் மட்டுமே கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது.

தொலைத்தொடா்பு நுகர்வோார் பாதுகாப்பு (13-ஆவது திருத்தம்) விதிமுறைகள் 2026-ஐ டிராய் அண்மையில் வெளியிட்டது. இதன்படி, குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் மட்டுமே கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை, தொலைத்தொடா்பு நிறுவனங்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

டிராய்யின் இந்தப் புதிய வழிகாட்டுதலின்படி, மூன்று புதிய ரீசார்ஜ் திட்டங்களை ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ. 185, ரூ. 203 மற்றும் ரூ. 206 ஆகிய விலைகளில் இந்த ரீசார்ஜ் திட்டங்கள் கிடைக்கின்றன.

இந்த மூன்று திட்டங்களிலும் குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் மட்டுமே இடம்பெறும். அதாவது, டேட்டா தவிர்த்து, குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சேவையை மட்டும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

முன்னதாக, குரல் அழைப்பு மட்டும் தேவை என்றாலும் டேட்டாவுக்கும் சேர்த்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த ரீசார்ஜ் திட்டங்கள் அதிகாரப்பூர்வ ஏர்டெல் இணையதளம் மற்றும் செயலியில் செயல்பாட்டில் உள்ளது.

மேலும், டிராய்யின் இந்தப் புதிய விதிகளின்படி, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடஃபோன் ஐடியா போன்ற பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இத்தகைய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தும் என எதிபார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

Telecom major Airtel has introduced recharge plans that only include voice calling and short messaging (SMS) services on mobile phones.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.