மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கொல்கத்தா துர்கா பூஜை கூட்ட நெரிசல் சம்பவம்: ரூ. 25 லட்சம் இழப்பீடு, அரசு வேலை அறிவிப்பு!

கொல்கத்தா துர்கா பூஜை கூட்ட நெரிசல் பலி சம்பவத்தில் இழப்பீடாக ரூ. 25 லட்சம், அரசு வேலை அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

Published On :18 அக்டோபர் 2026, 7:56 am IST

கொல்கத்தாவில் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலியான சம்பவத்தில் ரூ.25 லட்சம் இழப்பீடு மற்றும் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தசரா பண்டிக்கை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டுக்கான நவராத்திரி பண்டிகைகளுக்கான ஏற்பாடுகள் களைகட்டியுள்ள நிலையில், சோர்பகன் சர்போஜானில் துர்கா பூஜைக்காகப் பந்தல் போடப்பட்டிருந்தது.

கொல்கத்தாவின் வடக்குப் பகுதியில் உள்ள சோர்பகன் சர்போஜானில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மிகக் கனமழை பெய்ததால், பந்தலுக்கு வெளியே கூடியிருந்த மக்கள் திடீரென முந்தியடித்துக்கொண்டு உள்ளே ஓடியதால், அவர்களில் சிலர் சாலையில் விழுந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தில் 19 பேர் பலியான நிலையில், காயமடைந்த 35-க்கும் மேற்பட்டோர் உயர் சிகிச்சைக்காக கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி பலியானவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என். ரவி, முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தா காவல்துறையின் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததாலேயே கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகப் பலர் குற்றம் சாட்டினர். மேற்கு முதல்வர் சுவேந்து அதிகாரி, இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில், கொல்கத்தா கூட்ட நெரிசலில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடும் முழு மருத்துவச் செலவுகளையும் அரசு ஏற்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Summary

West Bengal Chief Minister Suvendu Adhikari announced Rs 25 lakh compensation and a government job for the family of each person killed in the Kolkata stampede. The government will also cover the full medical expenses of the injured and provide Rs 5 lakh compensation to each of them.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.