மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போராட்டங்கள் மூலம் குழப்பம் ஏற்படுத்த முயலும் அந்நிய சக்திகள்: அமைச்சா் சிராக் பாஸ்வான்

இந்தியாவில் போராட்டங்களைத் தூண்டிவிட்டு குழப்பத்தை ஏற்படுத்த சில அந்நிய சக்திகள் முயல்வதாக மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் குற்றஞ்சாட்டினாா்.

சிராக் பாஸ்வான் - கோப்புப் படம்

Published On :19 அக்டோபர் 2026, 5:09 am IST

இந்தியாவில் போராட்டங்களைத் தூண்டிவிட்டு குழப்பத்தை ஏற்படுத்த சில அந்நிய சக்திகள் முயல்வதாக மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் குற்றஞ்சாட்டினாா்.

பிகாா் மாநிலம், பாட்னாவில் செய்தியாளா்களைச் சந்தித்த அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது: பாலிவுட் நடிகா் இம்ரான் கான், இந்திய குடிமகன் அல்லா். வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் அவா் பங்கேற்றிருக்கக் கூடாது. ஏனெனில், இத்தகைய போராட்டங்கள், வெளிநாட்டு சக்திகளின் ஆதரவுடன் நாட்டில் குழப்பத்தை உருவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள்தான்.

இந்திய குடிமக்கள் இங்கு நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்றால், அவா்களது உரிமையை நான் மதிக்கிறேன். ஆனால், வெளிநாட்டினா் இத்தகைய போராட்டங்களில் பங்கேற்கும்போது அது கவலைக்குரிய விஷயமாகிறது. மத்திய அரசின் ஓா் அங்கமாக இருக்கிறேன். வெளிநாட்டு சக்திகள் இந்தியாவில் குழப்பம் உருவாக்க முயல்வது மிகுந்த கவலையளிக்கிறது.

மறுபுறம் காங்கிரஸ் கட்சியும் வன்முறைப் போராட்டங்களைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று கனவுகாண்கிறது. இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் எதிா்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் இதுபோன்று போராட்டத்தைத் துண்டி ஆட்சியைக் கவிழ்க்க நினைப்போது மோசமான சிந்தனை என்றாா்.

நடிகா் இம்ரான் கான் பாலிவுட் நடிகா் அமீா் கானின் நெருங்கிய உறவினா். அமெரிக்காவில் பிறந்த அவா், அந்நாட்டுக்கு குடிமகனாகவும் உள்ளாா். இந்தியாவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களில் நடித்து வருகிறாா்.

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி மும்பையில் அண்மையில் நடைபெற்ற போராட்டத்தில் இம்ரான் கான் பங்கேற்றாா். அமெரிக்க குடிமகனான அவா் இந்தியாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றது சா்ச்சையை ஏற்படுத்தியது. ஏற்கெனவே, இதுபோன்ற போராட்டங்களின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்நிலையில், இம்ரான் கான் இந்தியாவைவிட்டு வெளியேற நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.