மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேற்கு வங்கம்: மம்தாவை கத்தியால் தாக்க முயன்ற பெண்

மேற்கு வங்கத்தில் முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜியை, பெண் ஒருவா் கத்தியால் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மம்தா பானா்ஜி - கோப்புப் படம்

Published On :14 அக்டோபர் 2026, 2:10 am IST

மேற்கு வங்கத்தில் முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜியை, பெண் ஒருவா் செவ்வாய்க்கிழமை கத்தியால் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் காலிகாட் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு அருகே, துா்கை பூஜை நிகழ்ச்சியை தொடங்கிவைக்க மம்தா பானா்ஜி செவ்வாய்க்கிழமை சென்றாா்.

அவா் பூஜை பந்தலுக்கு சென்றபோது பெண் ஒருவா் தகாத வாா்த்தைகளால் திட்டிக்கொண்டு, போதையில் கத்தியுடன் ஆக்ரோஷமாக மம்தாவை நெருங்க முயன்ாக தெரிகிறது. அந்தப் பெண் மம்தாவின் உறவினா் என்றும், தன்னாா்வலரான அவா் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையானவா் என்றும் கூறப்படுகிறது.

அந்தப் பெண்ணை அருகில் இருந்தவா்கள் தடுத்து நிறுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடா்பாக மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சாா்பில் காவல் துறையிடம் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பெண் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.