மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேற்கு வங்கம் இடைத்தேர்தல்! முன்னிலை நிலவரம்

மேற்கு வங்கம் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது.

05/10/2026, TN, PONDICHERRY: Regarding the voting for the By-election to be held tomorrow EVM and VVPAT Machines being shifted from Counting Centre at

Center-Center-Villupuram

Published On :9 அக்டோபர் 2026, 9:29 am IST

மேற்கு வங்கத்தில் ரெஜிநகா், நந்திகிராம் ஆகிய இரு பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

ரெஜிநகா் பாஜக வேட்பாளர் சகராவ் சர்க்கார், நௌடா தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பளார் ஹசிராணி ரத் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

மிகுந்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணும் பணி தொடங்கியிருக்கிறது.

மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி, பாஜக முதல் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றது. பவானிபூா், நந்திகிராம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற முதல்வா் சுவேந்து அதிகாரி, நந்திகிராம் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா்.

ரெஜிநகா், நௌடா ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற ஆம் ஜனதா உன்னாயன் கட்சியின் (ஏஜேயுபி) நிறுவனா் ஹுமாயூன் கபீா், ரெஜிநகா் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, நந்திகிராம், ரெஜிநகா் ஆகிய இரு தொகுதிகளிலும் கடந்த அக்.6-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.

திரிணமூல் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில், நந்திகிராம் தொகுதியில் மம்தா அணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சஞ்சிதா பிரதான், திடீரென முதல்வா் சுவேந்து அதிகாரியை சந்தித்துப் பேசியதுடன், தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றாா். இதையடுத்து, அந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக மம்தா அறிவித்தாா்.

ரெஜிநகரில் பாஜக, மம்தாவின் இரு அணிகள், காங்கிரஸ், ஏஜேயுபி என பலமுனை போட்டி நிலவுகிறது. முதல் சுற்று முன்னிலை நிலவரத்தில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.