மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ராகுல், பிரியங்கா மீது தில்லி காவல்துறை வழக்குப்பதிவு!

ராகுல், பிரியங்கா மீது தில்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது பற்றி...

Rahul

ராகுல், பிரியங்கா - PTI

Published On :7 அக்டோபர் 2026, 11:10 am IST

அகில இந்திய வானொலி நிலையத்துக்குள் அனுமதியின்றி நுழைந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மீது தில்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் அலுவலகம் நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நேற்று பேரணி நடத்தினர்.

பேரணி சென்ற எம்.பி.க்களை நீதி ஆயோக் அலுவலகம் வெளியே தில்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, அகில இந்திய வானொலி நிலையத்துக்குள் பகல் 1 மணியளவில் நுழைந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரவு 7 மணியலவில், அகில இந்திய வானொலி நிலையத்தில் புகுந்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் ஆதரவாளர்களை தில்லி காவல் துறை அப்புறப்படுத்தியது.

குறிப்பாக, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை காவல் துறை கைது செய்து, வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றது. பின்னர், நேற்றிரவு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், அகில இந்திய வானொலி நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தல் மற்றும் அனுமதியின்றி நுழைதல் ஆகிய பிரிவுகளின் கீழ் தில்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Summary

Delhi Police register case against Rahul and Priyanka!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.