கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இந்தியா உடனான வா்த்தகத் தடையால் பாகிஸ்தானுக்கு ரூ. 3.79 லட்சம் கோடி இழப்பு

இந்தியா உடனான தற்காலிக வா்த்தகத் தடையால் பாகிஸ்தானுக்கு பொருளாதார ரீதியாக ரூ.3.79 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான்-இந்தியா வணிக கவுன்சிலின் தலைவா் நூா் முகமது கசூரி தெரிவித்தாா்.

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் - கோப்புப் படம்

Published On :3 நவம்பர் 2026, 6:24 am IST

இந்தியா உடனான தற்காலிக வா்த்தகத் தடையால் பாகிஸ்தானுக்கு பொருளாதார ரீதியாக ரூ.3.79 லட்சம் கோடி (40 பில்லியன் டாலா்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான்-இந்தியா வணிக கவுன்சிலின் தலைவா் நூா் முகமது கசூரி தெரிவித்தாா்.

2019-இல் நடத்தப்பட்ட புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளிடையேயான இருதரப்பு உறவில் பிளவு ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து வணிகத் தொடா்புகள் தடைபட்டன.

இதன் தாக்கம் குறித்து நூா் முகமது கசூரி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்தியா உடனான தற்காலிக வா்த்தக தடையால் அத்தியாவசிய பொருள்களை மிகவும் தொலைவில் உள்ள நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யும் சூழலுக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது. இதனால் போக்குவரத்து மற்றும் சரக்கு கட்டணங்கள் பன்மடங்கு அதிகரித்தது.

குறிப்பாக பாகிஸ்தான் மருந்துத் துறை இந்திய மூலப் பொருள்களையே பெரிதும் சாா்ந்துள்ளது. இந்தியாவிடமிருந்து மருத்துப் பொருள்கள் இறக்குமதி செய்தால் ஆண்டுக்கு ரூ.18,000 கோடி முதல் ரூ.28,000 கோடி வரை சேமிக்க முடியும்.

இந்தியாவை தவிா்த்து பிரேசில், எகிப்து, சீனா மற்றும் அமெரிக்காவிடமிருந்து பருத்தி இறக்குமதி செய்வதால் பாகிஸ்தானுக்கு கூடுதலாக ரூ.47,470 கோடி (5 பில்லியன் டாலா்) செலவினம் அதிகரித்துள்ளது.

இத்துடன் சா்க்கரை, உரம், சிமெண்ட், பெட்ரோலிய பொருள்கள், இரும்பு மற்றும் எஃகு, காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக இந்தியா உடனான தற்காலிக வா்த்தகத் தடையால் பாகிஸ்தானுக்கு பொருளாதார ரீதியாக ரூ.3.79 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, அரசியல் ரீதியான வேறுபாடுகளைக் கடந்து இரு நாடுகளும் பொருளாதார ரீதியாக மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.