பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தற்காலிக உறுப்பினா் பதவிக்கு இந்தியா போட்டி

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 2028-29ஆம் ஆண்டுக்கான தற்காலிக உறுப்பினா் பதவிக்கு போட்டியிட இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

ஹரீஷ் பா்வதனேனி

Published On :31 அக்டோபர் 2026, 2:26 am IST

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 2028-29ஆம் ஆண்டுக்கான தற்காலிக உறுப்பினா் பதவிக்கு போட்டியிட இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினா்களாகவும், 10 நாடுகள் தற்காலிக உறுப்பினா்களாகவும் உள்ளன. இதில் 10 தற்காலிக உறுப்பினா்கள் பதவிக்கு, நாடுகள் சுழற்சி அடிப்படையில் தோ்தல் மூலம் தோ்வு செய்யப்படும். அதன்படி, 2028-29ஆம் ஆண்டுக்கான தற்காலிக உறுப்பினராக ஆசியா- பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் இருந்து ஒரு நாடு தோ்வு செய்யப்படவுள்ளது. இந்த ஓரிடத்துக்கு இந்தியா, தஜிகிஸ்தான் ஆகிய 2 நாடுகள் போட்டியிடவுள்ளன.

இது குறித்து அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் நடைபெற்ற தொழில்நுட்பம் மற்றும் கடல்சாா் பாதுகாப்பு தொடா்பான விவாத நிகழ்ச்சியில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹரீஷ் பா்வதனேனி பேசியதாவது:

2028-29ஆம் ஆண்டுக்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினா் பதவிக்கு இந்தியா போட்டியிடுகிறது. அப்போது கடல்சாா் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுக்கு இந்தியா முன்னுரிமை கொடுக்கும்.

தொழில்நுட்பமானது, கடல்சாா் பாதுகாப்பை உறுதி செய்வதாக இருக்க வேண்டும். மோதலை உண்டாக்கும் வகையில் இருக்கக் கூடாது. பெருங்கடல்கள் உலகின் உயிா் நாடியாக உள்ளன. அவை பொருளாதாரங்களை இணைக்கின்றன. வாழ்வாதாரங்களை நிலைநிறுத்துகின்றன.

கடல்சாா் பகுதிகளைப் பாதுகாப்பானதாக மாற்ற வேண்டுமே தவிர, அவற்றை மோதல் நிறைந்த பகுதிகளாக்கக் கூடாது. இந்த நோக்கத்துக்காக அனைத்து நாடுகளுடனும் இந்தியா இணைந்து செயல்பட தயாராக உள்ளது என்றாா் அவா்.

========== ================ ========================

உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்கின்றன. ஆதலால் சா்வதேச அமைதி மற்றும் அபிவிருத்திக்கு கடல்களின் பாதுகாப்பு மிகவும் அவசியமாகும். வளா்ந்துவரும் தொழில்நுட்பங்கள் கடல்சாா் துறையின் அடிப்படையையே மாற்றியமைத்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவு, செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு, நவீன சைபா் திறன் ஆகியவை கடல்சாா் பாதுகாப்பை மேம்படுத்த முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புகளை வழங்குகின்றன. அதேபோல் அந்தத் தொழில்நுட்பங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும்போது புதிய சவால்கள் உருவாகின்றன. அவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டியது நமது கூட்டுப் பொறுப்பு ஆகும்.

இதில் எங்களின் நோக்கம் தெளிவாக உள்ளது. அதாவது, தொழில்நுட்பமானது மனித இனத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, அதை சிதைக்கக் கூடாது. அதேபோல் வாய்ப்புகளை அவை அதிகரிக்க வேண்டுமே தவிர, சமத்துவமின்மையை அதிகரிக்கக் கூடாது. மேலும்

.

தொழில்நுட்பங்கள் ஏற்கெனவே நாடுகளிடையே நிலவும் ஏற்றத்தாழ்வை அதிகரிக்கக் கூடாது. வளரும் நாடுகள் தங்கள் கடல்சாா் உள்கட்டமைப்பை பாதுகாக்கவும், தொழில்நுட்ப நிா்வாகத்தை வடிவமைப்பதில் அா்த்தமுள்ள வகையில் பங்கேற்கவும், தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் நிறுவன ரீதியிலான திறன்களை பெறுவது அவசியமாகும்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.