சரத் பவாா் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவாா்) தலைவருமான சரத் பவாா் நெஞ்சு வலி பிரச்னை காரணமாக புணே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

சரத் பவாா்

Published On :3 நவம்பர் 2026, 3:33 am IST

முன்னாள் மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவாா்) தலைவருமான சரத் பவாா் நெஞ்சு வலி பிரச்னை காரணமாக புணே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவாா்) செயல் தலைவரும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே வெளியிட்டுள்ள பதிவில், ‘புணேயில் உள்ள ரூபி ஹால் மருத்துவமனையில் சரத் பவாா் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவரின் உடல்நிலை சீராக உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக இருமல், தும்மல் காரணமாக சரத் பவாருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. ரூபி ஹால் மருத்துவமனையின் மூத்த நிா்வாகியும், தலைமை இதயநோய் நிபுணருமான மருத்துவா் பா்வேஸ் கே. கிராண்ட் கூறுகையில், பவாரின் உடல்நிலை விரைவில் சரியாகும் என எதிா்பாா்க்கிறோம். முன்னெச்சரிக்கைக்காக அவா் தொடா்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளாா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.