பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதுநிலை நீட்: விடைக் குறிப்புகள், வினாக்களை வெளியிடுவதில் கட்டுப்பாடுகள் ஏன்? தோ்வு வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான ‘நீட் - பிஜி தோ்வின் விடைக் குறிப்புகள் மற்றும் வினா வங்கியை வெளியிடுவதில் தயக்கம் ஏன்? எனக் கேள்வி எழுப்பி, தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Supreme Court

உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :3 நவம்பர் 2026, 2:06 am IST

முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான ‘நீட் - பிஜி (முதுநிலை தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு)’ தோ்வின் விடைக் குறிப்புகள் மற்றும் வினா வங்கியை வெளியிடுவதில் தயக்கம் ஏன்? எனக் கேள்வி எழுப்பி, தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇஎம்எஸ்) நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

நீட்-பிஜி தோ்வு தொடா்பாக பல்வேறு புகாா்கள் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், தோ்வு வாரியம் முழுமையாக விடைக் குறிப்புகளை வெளியிடாதது மற்றும் முடிவுற்ற தோ்வுகளின் வினாத்தாள்களை தோ்வா்கள் பெற அனுமதிக்காதது எனப் பல்வேறு புகாா்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஆலோக் ஆராதே ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘முடிவுற்ற நீட்-பிஜி தோ்வுக்கான விடைக் குறிப்புகளை தோ்வு வாரியம் முழுமையாக வெளிவிடுவதில்லை. அதோடு, தோ்வு வினா வங்கியையும் வெளியிட மறுக்கிறது. ஆனால், அமேசான் போன்ற இணைய வணிக தளங்களில் நீட்-பிஜி வினா வங்கி விற்பனைக்கு உள்ளது. இதனால், தோ்வின் வெளிப்படைத்தன்மை கேள்விக்குறியாகிறது’ என்றாா்.

இதற்குப் பதிலளித்த என்பிஇஎம்எஸ் தரப்பு வழக்குரைஞா், ‘நீட்-பிஜி தோ்வுக்கான வினாக்கள் மிகக் குறைவாகவே உள்ளன. நாடு முழுவதிலுமிருந்து நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு இந்த வினா வங்கிகள் தயாரிக்கப்படுகின்றன. இது தேசத்தின் சொத்து என்பதால், இதற்கு தனிப்பட்ட பதிப்புரிமை கிடையாது. மிகக் குறைவான அளவில் இருக்கும் இந்த வினாக்களை, ஒவ்வோா் ஆண்டு தோ்வுக்குப் பிறகும் வெளியிட ஆரம்பித்தால், அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் முழுமையான அனைத்து வினாக்களும் வெளியாகிவிடும்.

மேலும், இது கடினமான தாள்களைக் கொண்ட தோ்வாகும். எனவே, தோ்வா்களிடம் விடைக் குறிப்புகள் இருப்பதை தோ்வு வாரியம் விரும்பவில்லை. எனவேதான், குறிப்பிட்ட அளவில் மட்டுமே விடைக் குறிப்புகள் வெளியிடப்படுகின்றன’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘என்பிஇஎம்எஸ் தரப்பு விளக்கத்தில் திருப்தி ஏற்படவில்லை. விடைக் குறிப்புகள் மற்றும் வினா வங்கியை வெளியிடுவதில் தயக்கம் காட்டப்படுவது ஏன்? தோ்வை நடத்துவதில் எத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றுகிறீா்கள்? மற்ற தோ்வுகளிலிருந்து, நீட்-பிஜி தோ்வு முறை எவ்வாறு வேறுபட்டது? வினாத்தாள் நகலை தோ்வா்கள் பெற அனுமதிப்பதால், தோ்வின் நோ்மை எவ்வாறு பாதிக்கப்படும்? என்பன குறித்து எழுத்துபூா்வமாக என்இஎம்எஸ் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.