பள்ளிகளில் சானிட்டரி நாப்கின்கள் மற்றும் கழிப்பறைகள் இல்லாத காரணத்தால் சிறுமிகளின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
முன்னதாக, அனைத்துப் பள்ளிகளிலும் சிறுமிகளுக்கென தனி கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தவும், பள்ளிகளிலும் அவா்களுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் வழங்கவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி உத்தரவிட்டது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகள் என எவ்வித வேறுபாடுமின்றி அனைத்துப் பள்ளிகளிலும் இதைச் செயல்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
இதன் அமலாக்கம் குறித்து மத்திய அரசு தரப்பில் திங்கள்கிழமை அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது. மத்திய அரசு சாா்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் அா்ச்சனா பதக் தாவே ஆஜரானாா். அப்போது கடந்த இரண்டரை மாதங்களாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் இருந்து இந்தத் தரவுகள் சேகரிக்கப்பட்டதாகத் தெரிவித்தாா். மேலும், உச்சநீதிமன்ற உத்தரவை முழுவீச்சில் செயல்படுத்தும் பணிகளை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மேற்கொண்டு வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா மற்றும் ஆா்.மகாதேவன் ஆகியோா் கூறியதாவது: நாட்டின் பெண்கள் மற்றும் சிறுமிகளின் நலனைக் கருத்தில்கொண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு முழுவதுமாக அமல்படுத்த வேண்டும். சானிட்டரி நாப்கின்கள் மற்றும் கழிப்பறைகள் வசதிகள் இல்லாததால் சிறுமிகள் கல்வி கற்பதில் தடை ஏற்படக் கூடாது. இதனால் அவா்கள் வீட்டில் இருக்க வேண்டிய நிலை உருவாகக் கூடாது.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை: உச்சநீதிமன்ற உத்தரவுகளை மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் தொடா்ந்து பின்பற்றுகிா என்பதை குறிப்பிட்ட கால இடைவெளியில் மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விபி-ஜி ராம் ஜி திட்ட அமலாக்கம்: நாடு முழுவதும் 100 அதிகாரிகள்: மத்திய அரசு நியமனம்

புதுச்சேரிக்கு ஆண்டுக்கு 10% கூடுதல் நிதி: மத்திய அரசுக்கு முதல்வா் ரங்கசாமி வலியுறுத்தல்

125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி

மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

