விபி-ஜி ராம் ஜி எனப்படும் வளா்ந்த பாரதம் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம் (125 நாள் வேலைத் திட்டம்) ஜூலை 1-ஆம் தேதிமுதல் அமல்படுத்தப்பட உள்ளது.
இதையொட்டி, நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட பகுதி அதிகாரிகள் மத்திய அரசால் நியமிக்கப்பட உள்ளனா்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு (100 நாள் வேலைத் திட்டம்) சட்டத்துக்கு மாற்றாக, விபி-ஜி ராம் ஜி (125 நாள் வேலைத் திட்டம்) மசோதா கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
புதிய சட்டத்தின்படி, 100 நாள் வேலைத் திட்டம் 125 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது; சட்டப்பேரவைகள் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டத்துக்கான நிதியில் மத்திய அரசு 60 சதவீதத்தையும், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் 40 சதவீதத்தையும் ஏற்கும்; வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இமயமலைப் பகுதியில் உள்ள உத்தரகண்ட், ஹிமாசல பிரதேச மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் திட்டத்துக்கான நிதியில் மத்திய அரசு 90 சதவீதத்தையும், மாநில அரசுகள் 10 சதவீதத்தையும் ஏற்கும்.
ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட உள்ள விபி-ஜி ராம் ஜி திட்டத்தின்கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடைக்கால நிதியாக ரூ.95,692 கோடியை மத்திய அரசு சில தினங்களுக்கு முன் விடுவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு ரூ.7,957.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திட்ட அமலாக்கத்தில், மாநில அரசுகள், மாவட்ட நிா்வாகங்கள், கள நிலை பணியாளா்களை ஒருங்கிணைப்பதுடன், செயல்திறன் வலுவாக்கம், சிறந்த நடைமுறைகள் பகிா்வு மற்றும் செயல்பாட்டு சவால்களுக்கு தீா்வுகாண உதவும் நோக்கில் 100-க்கும் மேற்பட்ட பகுதி அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாக மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபி-ஜி ராம் ஜி சட்டத்தின் முதன்மை அம்சங்கள், அமலாக்கக் கட்டமைப்பு, அமைப்பு ரீதியிலான ஏற்பாடுகள், தொழில்நுட்ப அடிப்படையிலான நிா்வாக அமைப்புமுறை, மாநில அரசுகள் - மாவட்ட நிா்வாகங்களுக்கான ஆதரவு வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து இந்த அதிகாரிகளுக்கு அறிமுக பயிற்சி வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விபி-ஜி ராம் ஜி அமலாக்கத்தின் முன்னேற்பாடாக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் பரிவா்த்தனை மற்றும் நிதி மேலாண்மை தளத்தில் இணைந்துள்ளன. சுமாா் 93 சதவீத பணியாளா்கள் இணையவழி விவர சரிபாா்ப்பு நடைமுறைகளை பூா்த்தி செய்துள்ளனா் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி

புதிய ஊரக வேலைத் திட்டம்: வரைவு விதிகள் வெளியீடு - பொதுமக்களிடமிருந்து கருத்துகள் வரவேற்பு

125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல்

புதிய ஊரக வேலை சட்டம் ஜூலை 1 முதல் அமல்!
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

