கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேரளத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, நீண்ட இழுபறிக்குப் பிறகு புதிய முதல்வராக வி.டி. சதீசன் இன்று (மே 14) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ பேபி, மூத்த தலைவர்கள் ஏ. விஜயராகவன், கே. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட மாநிலக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2016 முதல் 2026 ஆம் ஆண்டு வரை கேரளத்தின் முதல்வராக 2 முறை பதவி வகித்த பினராயி விஜயன் புதிய சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படக் கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி வெறும் 35 தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளில் முதல்முறையாகத் தோல்வியைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Former CM Pinarayi Vijayan has been elected as the leader of the Marxist Communist Legislative Party in Kerala.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!

பினராயி விஜயன் ராஜிநாமா!

கேரள முதல்வர் பினராயி விஜயன் பின்னடைவு!

கேரள முதல்வர் பினராயி விஜயன் தொகுதியில் வெடிபொருள்கள் பறிமுதல்!
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை

வார ராசிபலன்! | May 17 முதல் 23 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி செய்திச் சேவை

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


