கேரளத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் முதல்வர் பினராயி விஜயன் தொகுதியில் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்தில் 140 தொகுதிகளுக்கான பேரவைத் தேர்தல் தேர்தல் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நாளை(மே 4) நடைபெறுகிறது. இந்த நிலையில் முதல்வர் பினராயி விஜயன் போட்டியிடும் தர்மடம் தொகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் வெடிமருந்து போன்ற வெடிபொருள்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
நாட்டு வெடிகுண்டுகளைப் போன்ற சட்டவிரோத பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மெப்போயில் பகுதியின் தன்னாடாவில் உள்ள வீட்டில் எடக்காடு போலீஸ் குழு சோதனை நடத்தியது. சோதனையில், ஐந்து நாட்டு வெடிகுண்டுகள், மூன்று கிலோகிராமுக்கும் அதிகமான வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக குடியிருப்பாளர் நானு மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பட்டாசு உற்பத்தி என்ற போர்வையில் அந்த வளாகத்தில் வெடிபொருள்கள் தயாரிக்கப்படுவதாகக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உரிமம் பெற்ற பட்டாசுக் கடைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, அப்பகுதியில் சட்டவிரோத பட்டாசு உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
Summary
Police seized explosive materials, such as crude country-made bombs and gunpowder, during a search in the Dharmadam Assembly constituency, represented by CM Pinarayi Vijayan, a day ahead of the counting of votes.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பினராயி விஜயன் ராஜிநாமா!

கேரள முதல்வர் பினராயி விஜயன் பின்னடைவு!

2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்

மோடிக்கு கேரள முதல்வர் விஜயன் பயப்படுகிறார்! - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


