மத்திய பிரதேசத்தின் பர்கி அணையில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூா் மாவட்டத்தில் உள்ள நா்மதை ஆற்றில் பா்கி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் வியாழக்கிழமை மாலை சுற்றுலாப் படகு சவாரியில் 29 போ் சென்றனர். அப்போது எதிா்பாராதவிதமாக பலத்த சூறைக்காற்று வீசி, அணை நீர் சீற்றம் அடைந்துள்ளது.
இதில் படகு சமநிலையை இழந்து நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து நிகழ்விடம் விரைந்த மாநில பேரிடா் மீட்புப் படை, பிற மீட்புக் குழுக்கள் மற்றும் உள்ளூா் மக்களின் உதவியோடு 28 பேர் உயிருடன் மீட்கப்பட்டனா்; 9 போ் நீரில் மூழ்கி பலியாகினர்.
காணாமல் போன 4 பேரைத் தேடும் பணி நடைபெற்று வந்தது. சனிக்கிழமை இரண்டு சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை ஐந்து வயது சிறுவன் மற்றும் அவனது மாமாவின் உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காணாமல் போன கடைசி நபரின் உடலும் மீட்கப்பட்டது. காணாமல் போனதாக அடையாளம் காணப்பட்ட 13 பேரும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுவிட்டனர் என்றும், உடல்கள் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும் காவல் அதிகாரி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இதனிடையே சம்பவம் குறித்து விசாரணைக்கு மாநில அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டதுடன், மூன்று படகு பணியாளர்களையும் பணிநீக்கம் செய்தது. மேலும், மாநிலத்தில் இதுபோன்ற படகுகளை இயக்குவதற்கும் தடை விதித்துள்ளது.
உயிர் காக்கும் லைஃப் ஜாக்கெட் சரியான நேரத்தில் வழங்கப்படாதது போன்ற அலட்சியம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாகவே விபத்து நிகழ்ந்ததாக உயிர் பிழைத்தவர்களில் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
Summary
The bodies of a five-year-old boy and his uncle were recovered from Bargi Dam in Madhya Pradesh's Jabalpur district on Sunday morning, raising the death toll in the cruise boat tragedy to 13, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ம.பி. படகு விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 13-ஆக உயர்வு

ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
ம.பி.: சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு

உ.பி. படகு விபத்து: பலி 13ஆனது, தொடரும் தேடும் பணி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


