/

ம.பி.: சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு

மத்திய பிரதேசத்தில் கார் மீது மினி லாரி மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு

News image

சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு - PTI

Updated On :30 ஏப்ரல் 2026, 2:59 pm IST

மத்திய பிரதேசத்தில் கார் மீது மினி லாரி மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் மினி லாரியில் சுமார் 35 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு, இந்தூர் - அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி, எதிர் திசையில் வந்த எஸ்யூவி ரக கார் மீது மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான மினி லாரி

விபத்துக்குள்ளான மினி லாரி - PTI

இந்த விபத்தில் மினி லாரியில் பயணித்தவர்களில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதனைத் தொடர்ந்து, விபத்தில் சிக்கி காயமடைந்த சுமார் 20 பேரை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாகனத்தில் அதிகளவிலான ஆள்களை ஏற்றியதாலும், அதிவேகமாகச் சென்றதாலும்தான் விபத்து நேரிட்டதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனிடையே, மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் உயிரிழந்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர்

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் - PTI

Summary

Death toll climbs to 16 in van-SUV collision in Madhya Pradesh's Dhar district

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.