புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

கூட்டுப் பாலியல் வன்கொடுமை: தலைநகரில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா? - ஆம் ஆத்மி

தில்லியில் நிகழ்ந்த பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து, தலைநகரில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா? என்று ஆம் ஆத்மி கேள்வி.

News image

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் - படம் - பிடிஐ

Updated On :14 மே 2026, 3:43 pm IST

தில்லியில் நிகழ்ந்த பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து, தலைநகரில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா? என்று ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, பெண் ஒருவர் தொழிற்சாலையில் வேலை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். சரஸ்வதி விஹாரில் உள்ள பி-பிளாக் பேருந்து நிலையம் அருகே அவர் சென்றபோது, ​​பேருந்தின் கதவருகே குற்றவாளிகளில் ஒருவர் நிற்பதைக் கண்டு அவரிடம் நேரத்தைக் கேட்டார். அதைத் தொடர்ந்து, குற்றவாளிகள் அந்தப் பெண்ணை பேருந்தினுள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதில் தொடர்புடைய பேருந்தை பறிமுதல் செய்ததோடு நடத்துநர், ஓட்டுநர் ஆகியோரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.

இதுகுறித்து பேசிய சஞ்சய் சிங், “ இன்று, ஓடும் பேருந்தினுள் நடந்த மற்றொரு அதிர்ச்சிகரமான கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது ஏற்கெனவே நடைபெற்ற நிர்பயா கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தைப் போன்று அரங்கேறியுள்ளது.

நாட்டின் தலைநகரான தில்லியில் பாதுகாப்பு உள்ளதா? பெண்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு இதுதானா? இதுபோன்ற சம்பவங்களை எதிர்த்து மக்கள் குரல் எழுப்பினாலோ அல்லது போராடினாலோ அவர்கள் தாக்கப்படுகின்றனர். இழுத்துச் செல்லப்படுகின்றனர். அவர்கள்மீது தடியடி நடத்தப்படுகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழும் மையமாக தில்லி விளங்குகிறது. பெண்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சிதைக்கப்படுகிறது. இது மிகவும் தீவிரமான மற்றும் கவலைக்குரிய பிரச்னை ஆகும். மேலும், மத்திய அரசு, ஆளுநர் மற்றும் தில்லி காவல்துறை ஆணையர் ஆகியோர் இதற்கு பதிலளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Summary

Following the gang-rape incident involving a woman in Delhi, Aam Aadmi MP Sanjay Singh has raised the question: "Is the capital safe for women?"

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.