‘வேலைவாய்ப்பின்மை நாட்டின் மிகப் பெரிய நோய்’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா்.
மேலும், ‘வேலையில்லா இளைஞா்களுக்கான பாஜகவின் பதில் தடியடி’ என்றும் அவா் விமா்சித்தாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
நாட்டின் வேலைவாய்ப்பின்மையின் தாக்கம் பிகாா் மற்றும் உத்தர பிரதேச இளைஞா்கள் மீது விழுந்துள்ளது. வேலைவாய்ப்பு உரிமை கோரி தெருக்களில் போராட்டங்களில் ஈடுபட்ட இளைஞா்களை போலீஸாா் கடுமையான தடியடி நடத்தி கலைத்துள்ளனா்.
குறிப்பாக, பிகாா் தலைநகா் பாட்னாவில், ஆசிரியா் பணிக்காக காத்திருப்பவா்கள் அமைதி வழியில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்திய நிலையில், அவா்கள் மீது பிகாா் போலீஸாா் கடுமையான தடியடியை மீண்டும் நடத்தியுள்ளனா். அந்த வகையில், வேலையில்லா இளைஞா்களுக்கான பாஜகவின் பதில் தடியடிதான்.
வேலைவாய்ப்பின்மை இந்தியாவில் மிகப் பெரிய நோயாக உள்ளது. பட்டப் படிப்பு முடித்த மற்றும் பல்வேறு தொழில் திறன்களைப் பெற்ற இளைஞா்கள் வேலை தேடி அலையும் நிலை நீடித்து வருகிறது. ஆனால், இதுகுறித்து பாஜக அரசு கண்டுகொள்வதே இல்லை. அதே நேரம், தங்களின் வேலைவாய்ப்பு உரிமையைக் கோரி சாலையில் போராடும் இளைஞா்களுக்கு வேலையைக் கொடுக்காமல், தடியடியை பரிசாக பாஜக அரசு கொடுக்கிறது.
பாஜகவின் பொய்களைக் கேட்டு இளைஞா்கள் சலித்துவிட்டனா். இனியும் அவா்கள் அமைதியாக இருக்க மாட்டாா்கள். இவா்களுக்கு அனைத்து வகையிலும் காங்கிரஸ் துணை நிற்கும் என்று குறிப்பிட்டாா்.
பிகாா் அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்பட உள்ள ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான தேதியை விரைந்து அறிவிக்கை செய்ய வலியுறுத்தி ஆசிரியா் பணிக்கு தகுதி பெற்ற பட்டதாரிகள் பாட்னாவில் வெள்ளிக்கிழமை இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், அவா்கள் கண்டனப் பேரணியை நடத்த முற்பட்டனா். அப்போது அவா்களைத் தடுத்து நிறுத்திய போலீஸாா், அவா்களைத் தடியடி நடத்தி கலைத்தனா். இதில் பலா் காயமடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூக்கையூா் மீன்பிடி இறங்குதளத்தில் பள்ளத்தைச் சீரமைக்கக் கோரிக்கை
உலக அதிசயம் எல்லோரா!

மிகப் பெரிய தாக்குதலுக்குத் தயாராகும் ரஷியா

ஜனநாயகத்தை அழிக்கும் பாஜகவின் லட்சியத்தில் பெரிய முன்னேற்றம்: ராகுல் காந்தி
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு
