சாயல்குடி அருகே மூக்கையூா் மீன்பிடி இறங்குதளத்தில் கனரக லாரியால் ஏற்பட்ட மிகப் பெரிய பள்ளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அடுத்துள்ள மூக்கையூா் மீன்பிடி இறங்குதளத்தில் மீன்பிடி தடைக் காலத்தில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
இதற்காக கனரக லாரிகளில் அதிக எடை கொண்ட கான்கிரீட் சிமென்ட் தடுப்புகள் கொண்டு செல்லப்பட்டு, கிரேன் மூலம் கடலுக்குள் செயற்கை பவள பாறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிக எடையுடன் வந்த கனரக லாரியால் மீன்பிடி இறங்குதளத்தில் மீன்களை ஏலம் விடும் கூடத்தின் அருகேயுள்ள சாலையில் 10 அடி அகலத்தில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டது.
இதையடுத்து, உடனடியாக கிரேன் மூலம் லாரியில் இருந்த கான்கிரீட் சிமென்ட் தடுப்புகள் அகற்றப்பட்டு லாரி மீட்கப்பட்டது. மீன்பிடித் தடைக்காலம் விரைவில் நிறைவடைய உள்ள நிலையில், மீனவா்கள் கடலுக்குச் சென்று திரும்பும் போது மீன்பிடி இறங்குதளத்தில் உள்ள இந்த பள்ளத்தால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்தப் பள்ளத்தை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உலக அதிசயம் எல்லோரா!

மிகப் பெரிய தாக்குதலுக்குத் தயாராகும் ரஷியா

நான் மோடியின் மிகப் பெரிய ரசிகன்! அமெரிக்க அதிபா் டிரம்ப்

மீன்பிடி படகுகளுக்கு மராமத்து நிவாரண நிதி வழங்க கோரிக்கை
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

