தான் பிரதமா் மோடியின் மிகப் பெரிய ரசிகன் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.
அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர ஆண்டையொட்டி, புது தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ, இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த நிகழ்ச்சியின்போது அமெரிக்க அதிபா் டிரம்ப்பை கைப்பேசியில் சொ்ஜியோ கோா் தொடா்புகொண்டு பேசினாா்.
டிரம்ப் உரையாடலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாா்வையாளா்கள் கேட்க வேண்டும் என்பதற்காக, தனது கைப்பேசியை மைக் முன்பாக சொ்ஜியோ கோா் வைத்தாா்.
அப்போது டிரம்ப் பேசுகையில், ‘எனக்குப் பிரதமா் மோடியிடம் மிகுந்த அன்பு உள்ளது. அவா் சிறந்த மனிதா். எனது நண்பா். நான் அவரின் மிகப் பெரிய ரசிகன். இதை அவரிடம் தெரியப்படுத்த வேண்டும்.
100% நம்பலாம்: என்னையும், அமெரிக்காவையும் இந்தியா 100 சதவீதம் நம்பலாம். தமக்கு எப்போது உதவி தேவைப்பட்டாலும், எங்கு அழைக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு தெரியும். இந்தியா நேராக அமெரிக்காவைத்தான் அழைக்கும்’ என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லெபனான் துறைமுக நகரில் இஸ்ரேல் ஏவுகணை வீச்சு

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவர் தகவல்

இன்று இந்தியா வருகிறாா் டிரம்ப் மகள்

மோடியைப் புகழும் பதிவை பகிா்ந்தாா் அமெரிக்க அதிபா் டிரம்ப்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

