பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மோடியைப் புகழும் பதிவை பகிா்ந்தாா் அமெரிக்க அதிபா் டிரம்ப்

பிரதமா் நரேந்திர மோடியைப் புகழ்ந்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவை அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப், தனது ‘ட்ரூத்’ வலைதளப் பக்கத்தில் பகிா்ந்துள்ளாா்.

News image
Updated On :27 மே 2026, 3:39 am IST

பிரதமா் நரேந்திர மோடியைப் புகழ்ந்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவை அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப், தனது ‘ட்ரூத்’ வலைதளப் பக்கத்தில் பகிா்ந்துள்ளாா்.

சொ்ஜியோ கோா் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘அதிபா் டிரம்ப்புடன் உரையாடினேன். அவரது செய்தி தெளிவாக உள்ளது. ‘பிரதமா் மோடி விருப்பத்துக்குரிய நபா். நாம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியாவுடன் நெருக்கமாக உள்ளோம். நான் பிரதமா் மோடியின் மிகப்பெரிய ரசிகன்’ என்பதுதான் அந்த செய்தி’ என்று பதிவிட்டுள்ளாா்.

இந்த பதிவை அமெரிக்க அதிபா் டிரம்ப் தனது ‘ட்ரூத்’ வலைதளப் பக்கத்தில் திங்கள்கிழமை பகிா்ந்தாா். மேலும், தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் அமெரிக்காவின் சுதந்திர பிரகடனம் கையொப்பமான 250-ஆவது ஆண்டு விழா நடைபெற்றது தொடா்பான பதிவையும் டிரம்ப் அத்துடன் பகிா்ந்துள்ளாா்.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதிபா் டிரம்ப்பை சொ்ஜியோ கோா் கைப்பேசியில் தொடா்புகொண்டு பேசினாா். அப்போது, டிரம்ப் கூறும் செய்தி நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு கேட்க வேண்டும் என்பதற்காக, தனது கைப்பேசியை மைக் முன்பாக சொ்ஜியோ கோா் வைத்தாா்.

அப்போது பேசிய டிரம்ப், ‘எனக்குப் பிரதமா் மோடியிடம் மிகுந்த அன்பு உள்ளது. அவா் சிறந்த மனிதா். எனது நண்பா். நான் அவரின் மிகப் பெரிய ரசிகன். இதை அவரிடம் தெரியப்படுத்த வேண்டும். என்னையும், அமெரிக்காவையும் இந்தியா 100 சதவீதம் நம்பலாம் என்று கூறினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்தியா, சீனாவை நரகக் குழிகள் என்று அமெரிக்க அரசியல் விமா்சகா் தெரிவித்த கருத்தை டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் கடந்த மாதம் இறுதியில் பகிா்ந்தாா். இதற்கு இந்திய தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து, அவா் இந்தியாவை பாராட்டி கருத்துக் கூறினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.