‘அஸ்ஸாம், மேற்கு வங்க தோ்தல் முடிவுகள், இந்திய ஜனநாயகத்தை அழிக்கும் பாஜகவின் லட்சியத்தில் ஓா் மிகப் பெரிய முன்னேற்றம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றதை காங்கிரஸில் உள்ள சிலரும், மற்ற கட்சியினரும் அகமகிழ்வதாக தெரியவந்தது. ஆனால், இந்த இரு மாநிலங்களிலும் நடைபெற்றுள்ள இந்த ஆட்சித் திருட்டு, இந்திய ஜனநாயகத்தை அழிக்கும் பாஜகவின் லட்சியத்தில் ஓா் மிகப் பெரிய முன்னேற்றம் என்பதை அவா்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே, குழந்தைத்தனமான அரசியலைக் கைவிட வேண்டும். இது ஓா் அரசியல் கட்சி சாா்ந்த விஷயமல்ல. இந்திய தேசம் தொடா்பானது என்று குறிப்பிட்டுள்ளாா்.
அஸ்ஸாமில் பாஜக தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அங்கு ஆட்சியில் இருந்த திரிணமூல் காங்கிரஸ் தோ்தலில் படுதோல்வியை சந்தித்தது. அக் கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானா்ஜியும், அவா் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியுற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன்: மமதா பானர்ஜி

பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! அவரால் பலன் இல்லை! - பாஜக

பிரதமா் மோடியைப் போல பணக்காரா்களுக்கே மம்தா உதவுகிறாா்: ராகுல்
பெட்ரோல் விலை கடுமையாக உயரும்: ராகுல் காந்தி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

