தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

நாட்டின் முப்படைத் தலைமைத் தளபதியாக என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம்!

நாட்டின் முப்படைத் தலைமைத் தளபதியின் நியமனம் குறித்து...

News image

லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி - ANI

Updated On :1 மணி நேரம் முன்பு

பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, அடுத்த முப்படைத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், பதவியேற்ற நாள் முதல் மறு உத்தரவு வரும் வரை, இந்திய அரசின் இராணுவ விவகாரத் துறை செயலராகவும் கூடுதலாக பணியாற்றுவார் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய முப்படைத் தலைமைத் தளபதியாக உள்ள ஜெனரல் அனில் சௌகான் அவர்களின் பதவிக்காலம் வரும் மே 30 ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதால், இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.

1985 ஆம் ஆண்டு 'தி கர்வால் ரைபிள்ஸ்' பிரிவில் ராணுவ அதிகாரியாகத் தனது பணியைத் தொடங்கிய என்.எஸ். ராஜா சுப்ரமணி, ஏறக்குறைய 40 ஆண்டுகால அனுபவம் கொண்டவர்.

லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, 2025 செப்டம்பர் 1 முதல் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் இராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். அதற்கு முன்பு, இராணுவத் தலைமைத் துணைத் தலைவராகவும், மத்திய கட்டளைப் பிரிவின் தலைமைத் தளபதியாகவும் பணியாற்றினார்.

என்.எஸ். ராஜா சுப்ரமணி தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்) பட்டத்தைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Summary

According to a statement issued by the Ministry of Defence, Lieutenant General N.S. Raja Subramani has been appointed as the next Chief of Defence Staff.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.